ETV Bharat / bharat

குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தான் பொய் சொல்கிறது

டெல்லி: உளவு பார்த்த குற்றச்சாட்டில், பாகிஸ்தான் ராணுவத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு அந்நாட்டின் சிறையில் உள்ள இந்திய முன்னாள் கடற்படை அலுவலர் குல்பூஷன் ஜாதவ்,  வழக்கு தொடர்பாக சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: பாகிஸ்தானை சாடிய இந்தியா

author img

By

Published : Jul 10, 2020, 3:17 AM IST

இந்திய கடற்படையின் முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ் தங்கள் நாட்டுக்கு எதிராக உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் 2016ஆம் ஆண்டு பலுசிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, ஜாதவ் மீதான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, இந்தத் தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.

குல்பூஷன் ஜாதவ் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குல்பூஷன் ஜாதவ், தனது மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக கருணை மனு தாக்கல் செய்ய விரும்புவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இத்தகவல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறுகையில், தனது மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய குல்பூஷன் மறுக்கவில்லை என்றும், அவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் கூற்றை ஒரு "கேலிக்கூத்து" என்று இந்தியா விமர்சித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா "குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். இந்திய நாட்டினரின் உயிரைப் பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். ஜாதவ் தனது உரிமைகளைத் துறக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜாதவ், மறுஆய்வு மனுவைத் தொடங்க மறுத்துவிட்டார் என்ற பாகிஸ்தானின் கூற்று, கடந்த நான்கு ஆண்டுகளாக நாடகத்தில் இருந்து வரும் கேலிக்கூத்தின் தொடர்ச்சியாகும்". என்று கூறினார்.

இதையும் படிங்க: பொய் பேசுமாறு ஜாதவுக்கு பாக். அழுத்தம்: வெளியுறவுத் துறை குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.