இந்தியாவில் நடைபெறும் கரோனா பரிசோதனைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கரோனா பரிசோதனை தொடர்பாக உலக சுகாதாரா மையம் சில முக்கிய அறிவுறுத்தல்களை மேற்கொண்டுள்ளது. அதில், முக்கியமாக ஒவ்வொரு நாடும் 10 லட்சம் மக்களுக்கு 140 என்ற எண்ணிக்கை விகிதம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியா அந்த இலக்கை விட ஆறு மடங்கு அதிக பரிசோதனையை தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் மக்கள் தொகைக்கு 828 (140ஐவிட சுமார் ஆறு மடங்கு அதிகம்) என்ற அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த எண்ணிக்கை குறியீட்டின்படி நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 2,717 பரிசோதனைகள் மேற்கொள்ளபடுகின்றன.
1,319 பரிசோதனைகளுடன் கோவா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 280 பரிசோதனைகளுடன் ராஜஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 66 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு