உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தினமும் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு :
கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 31 ஆயிரத்து 223ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (டிச.19) ஒரேநாளில் 341 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 477ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்து 80 ஆயிரத்து 402ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 95.51 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 29 ஆயிரத்து 690 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தமாக 16 கோடியே 11 லட்சம் 98 ஆயிரத்து 195 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் 11 லட்சத்து ஏழாயிரத்து 681 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
உலக அளவில் ஏழு கோடியே 66 லட்சத்து 19 ஆயிரத்து 99 பேர் நோய்த் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்து 91 ஆயிரத்து 767 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுவரை ஐந்து கோடியே 23 லட்சத்து 14 ஆயிரத்து 362 பேர் குணமடைந்துள்ளனர்.