உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:
கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்து 44 ஆயிரத்து 940ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (ஆக.22) ஒரே நாளில் 912 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 56 ஆயிரத்து 706ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு விகிதம் 1.86 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 80 ஆயிரத்து 566ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 74.90 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 6 லட்சத்து 97 ஆயிரத்து 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தினசரி எண்ணிக்கையானது கடந்த 18 நாட்களாக 20 லட்சத்திற்கும் அதிகமாகப் பாதிப்பு பதிவாகி வருவதாக, உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 3 கோடியே 52 லட்சத்து 92 ஆயிரத்து 220 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து ஆயிரத்து 147 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் கரோனா பாதிப்பில், மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நேற்றைய தினம் கரோனா வைரஸால் புதிதாக 5 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3 லட்சத்து 73 ஆயிரத்து 410ஆக அதிகரித்து இரண்டாமிடத்தில் நீடிக்கிறது. ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 18 நாள்களாகத் தினமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் பாதிப்பு
உலகளவில் 2.33 கோடி பேர் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 8.8 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா முதலில் உள்ளது. இரண்டாவதாக பிரேசில், அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த வைரஸ் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து- ஹர்ஷ் வர்தன்