'தொடர்புகொள்ளுதல், தகவலை அளித்தல், மாறுதலுக்கு உள்ளாதல், குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் மூன்று ஆண்டுகள்' என்ற புத்தகத்தை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாடு எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் அறிமுக விழா இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கரோனா பரவல் ஏற்படவில்லையெனில் பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடாக இந்தியா விளங்கி இருக்கும் என தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "கரோனா தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் அடுத்த 7-8 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடாக திகழ்ந்திருக்கும். கரோனாவுக்கு எதிராக போரிட்டுவரும் நிலையில், தலைசிறந்த முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
வெங்கையா நாடு குறித்து அவர் கூறுகையில், "பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வலுவாக மாறிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்துவருவது அவர் செய்த அதிர்ஷ்டம்" என்றார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் அதிரடி: நக்சல் ஒருவர் உயிரிழப்பு