ETV Bharat / bharat

லடாக் எல்லை விவகாரம் : இந்திய-சீன உறவில் விரிசல்

டெல்லி : சிக்கலான லடாக் எல்லை விவகாரம் இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவில் அழுத்தத்தையும், விரிசலையும் ஏற்படுத்தியுள்ளதாக சொசைடி ஃபார் பாலிசி ஸ்டடீஸ் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சி உதய பாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கருத்துக் கட்டுரை இதோ...

INDIA CHINA UDAY BASKAR
INDIA CHINA UDAY BASKAR
author img

By

Published : May 27, 2020, 2:12 AM IST

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் என்று அழைக்கப்படும் இந்திய-சீன எல்லையில் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 200 முதல் 1500 சீனா ராணுவத்தினர் இந்திய ராணுவத்தைக் கண்ணோடு கண் எதிர்கொண்டுள்ளனர் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளன.

லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்கோங் ஏரியின் வடக்கு கரையோரம், கால்வான் நதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் இருநாட்டுப் படைகளும் எதிரெதிரே நின்று கொண்டிருக்கிறனர்.

ஆனால், இந்தியாவோ, சீனாவோ மோதலை மேலும் தூண்டும் விதமாக எந்த அறிக்கையையும் வெளியிடாமல் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இப்பிரச்னை தீரும்வரை இந்த விவேகமும், பொறுமையும் காக்கப்படுமா?

இந்த விவகாரத்தின் வெளிப்பாடாக, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள சீனர்களை ஜூன் மாதம் தொடக்கம் முதல் மீட்க அந்நாடு திட்டமிட்டுள்ளது. மற்ற நாடுகளில் சீனர்கள் அதிகம் பேர் சிக்கியுள்ள சூழலில், இந்தியாவில் உள்ள சில ஆயிரம் சீனர்களை மட்டும் மீட்கச் சீனா முன்வந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனத் தொகையில் உலகின் இரண்டு மிகப் பெரிய நாடுகளாக விளங்கும் இந்தியா-சீனா உறவில் ஏற்பட்டுள்ள இந்த கலக்கம் குறித்து ஆராயலாம்.

இந்தியா 1947இல் விடுதலை அடைந்தது. தொடர்ந்து, சீனா 1949ஆம் ஆண்டு சுதந்திர காற்றைச் சுவாசித்தது. பழம்பெரும் நாகரிகங்களின் கூடாரமான இவை இரண்டும் நவீன யுகத்தில் புதிய தேசங்களே. காலனி ஆட்சியின்போது இருநாட்டின் நவீன எல்லைகளும் வகுக்கப்பட்டன. ஆனால், இந்த எல்லைகள் சர்ச்சைக்குரிய, தீர்க்கப்படாத விவகாரமாக இன்றளவும் நீடித்து வருகிறது.

எல்லைப் பிரச்னையால் 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருநாட்டுக்கும் இடையே போர் மூண்டு சிறிது காலம் நீடித்தது. இந்தப் போர் முடிந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை.

இதன் காரணமாகவே, லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் (LoAC) எனப்படும் பிரத்யேக எல்லைக் கோடுகள் இருநாட்டு எல்லை இடையே வரையப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாகச் சீன கிலெம் லைன், இந்திய கிலெம் லைன் என மேலும் இரு எல்லைக் கோடுகள் உள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் இருநாட்டுக்கு இடையே கையெழுத்தாகி, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சியில் முறைப்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் அருகே ரோந்துப் பணியின் போது அடிக்கடி சிறு சிறு சச்சரவுகள் சகஜமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் , எப்போதுமே பலத்த பாதுகாப்புடன் இருக்கும் இந்த எல்லைப் பகுதியில் கடந்த 25ஆண்டுகளில் இதுவரை ஒரு முறை கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றதில்லை.

இந்திய-சீன எல்லையில் இதுவரை மூன்று பெரிய மோதல்கள் நிகழ்ந்துள்ளன - தெஸ்சாங் (2013), சும்மார் (2014), டோக்லாம் (2017). ஆனால், இவை அனைத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்டுவிட்டன.

கடந்த ஏப்ரல் மாத்தின் மூன்றாவது வாரத்தில் சீனப் படையினர் லடாக் எல்லை அருகே அதிகளவில் குவிக்கப்பட்டனர். இது பிறகு தான் கவனிக்கப்பட்டது. மீண்டும் ஒரு கார்கில்? இம்மாத தொடக்கத்தில் சீனப் படையின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்தையும் தாண்டியது. அதற்குச் சமமாக இந்தியத் தரப்பும் அங்கு ராணுவ எண்ணிக்கையை கூட்டியுள்ளது.

லடாக்கில் சீனாவுடன் இந்தியா 489 கி.மீ, எல்லையைப் பகிர்ந்து வருகிறது. கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் மாதம் முன்பு சச்சரவுகளோ, அத்துமீறல்களோ நடந்ததில்லை.

தற்போது எழுந்துள்ள இந்த மோதல் பூதாகரமாக வெடிப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆகையால், பேச்சுவார்த்தை மூலம் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம். சீனா ஏன் இந்த மோதலில் ஈடுபடுகிறது என்பது இதுவரை புலப்படவில்லை.

ரோந்துப் பணிகளில் ஏற்பட்ட அத்துமீறல்கள், பாதுகாப்பு கட்டுமானங்கள் உள்ளிட்டவை மோதலுக்கு வித்திட்டிருக்கலாம்.

தென் சீனக் கடலிலோ, இந்திய எல்லைப் பகுதியிலோ சீனா அத்துமீறல்களில் ஈடுபடும் போது ஒரு பேட்டனை கடைப்பிடிப்பு தெரிகிறது.

அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சியில் சீனா அதன் எல்லைகளை காப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தைவான் விஷயத்தில் சீனாவின் கவனம் மிகத் தீவிரமாக உள்ளது.

இந்த மோதல் பெரியளவிலான ராணுவ மோதலாக வெடிக்குமா, அல்லது புஸ்வானமாகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எல்லை அத்துமீறல், தேசியவாதம் என்றும் வரும்போது இருநாடுகளும் ஒருமித்த நிலைப்பாடுகளையே எடுக்கின்றன.

கோவிட்-19 பெருந்தொற்று இந்தியா-சீனாவின் மத்திய அரசுகளுக்கு பெருஞ்சவாலாக அமைந்துள்ள வேளையில், லடாக் விவகாரத்தில் இறுதிவரை பொறுமையும், விவேகமும் கடைப்பிடிக்கப்படும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க : மகனுக்கு 'X AE A-Xii' எனப் பெயர்சூட்டிய டெஸ்லா சிஇஓ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.