பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் தரன் சாஹிப் மாவட்டத்தில், பாதுகாப்புப்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் மூன்று கிலோகிராம் ஹெராயின், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள அபின் ஆகிய போதைப்பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர், அவர்களிடமிருந்த போதைப்பொருள்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்களின் பெயர் பிக்ரம்ஜித் சிங், நிர்மல் சிங், நச்சதர் சிங், பஞ்சாப் சிங், ராஜூ என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.