ETV Bharat / bharat

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி: மாற்றுவழியில் வெற்றிகண்ட இந்தியா - பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்று வழி

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழி ஒழிப்பு முறையில், நெகிழி பயன்பாட்டிற்கு மாற்று வழி கண்டறிந்து அந்தச் சோதனையில் இந்தியா வெற்றியும் கண்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

India achieved replacement, adopting alternative methods for single-use plastic

author img

By

Published : Dec 5, 2020, 10:24 AM IST

டெல்லி: காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியா மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டிற்குத் தடைவிதித்துள்ளது. அதுமட்டுமின்றி, அது தொடர்பான பல நெகிழிப் பொருள்களையும் தடைவிதித்துள்ளது.

இந்த நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டிற்கு மாற்றாகவும் பல்வேறு இயற்கை முறை பொருள்களை வழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது. இதில் வெற்றியும் பெற்றுள்ளது. தொடர்ந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியால் உண்டாகும் தீமைகள், அதற்கு மாற்று வழிகள் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

நீண்ட கால இலக்குகளை நோக்கி நகர்வதற்கு முன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

"இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக காலநிலை மாற்றம், நிலைத்தன்மைக்கான முயற்சிகள் மேற்கொள்வதை வரவேற்கிறேன். குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கிய செயல்பாடுகளை வரவேற்கிறேன்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பேப்பர் கப்பில் இவ்வளவு ஆபத்தா? அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.