ETV Bharat / bharat

திருமண வயதை அதிகரிப்பது தேவையற்றது - நிபுணர்கள் முன்வைக்கும் மாற்று பார்வை! - பெண்கள் வேலைவாய்ப்பு

பெண்கள் திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இது பல்வேறு விமர்சனங்களை நிபுணர் மத்தியில் உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக மூத்த செய்தியாளர் சந்திரலேகா சௌத்ரி எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்.

marriage
marriage
author img

By

Published : Sep 5, 2020, 6:59 PM IST

பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 21 ஆக உயர்த்திய மத்திய அரசின் முடிவு மேம்போக்கானது என்றும், ஆனாலும் தாய், பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை சற்று மேம்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், இந்நடவடிக்கை பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இச்சட்டத்தால் பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகள் அல்லது பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெரிதாக வழிவகுக்காது என்றும், அவர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருப்பது, நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான நிபுணர்கள் இம்முடிவை விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக பெண்கள், குழந்தைகளுக்கான அமைச்சகத்தால் கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்ட செயற்குழு, சிவில் சொசைட்டி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளனர். பருவ வயது, இள வயதினர், குழந்தைகள், பெண்கள் உரிமைகள் குறித்து பல காலமாக ஆராய்ச்சிகள், சட்டப்பூர்வ செயலாக்கங்களை மேற்கொண்டு வரும் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள், இது தொடர்பாக தங்கள் சார்பில் மூன்று கோரிக்கைகளை செயற்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஆழ்ந்த காரணங்களின்றி, திருமண வயதை அதிகரிப்பதன் மூலம் எவ்விதமான மாற்றங்கள் ஏற்பட்டு விடும் என்று அரசுக்கு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏராளமான பெண்களின் திருமண நிலை, அவர்களுக்கான உரிமைகள் குறித்த பாதுகாப்பின்மை நிலவும் சூழலில், திருமண வயதை அதிகரிப்பதன் மூலம் எப்படி முன்னேற்றம் ஏற்படும் என்று தங்கள் கூட்டறிக்கையில் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை சிறுவயதிலேயே வேலைக்கு கட்டாயப்படுத்தும் குற்றச்செயலைச் செய்யும் பல குடும்பங்கள், இந்த அறிவிப்பால் பெண்களுக்கு திருமணம் செய்யாமல் தங்கள் சுயநலத்திற்காக பல ஆண்டுகள் பெண்களை வேலைக்கு அனுப்பி ஆதாயம் தேடுவார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் “திருமண வயதை அதிகரிப்பதன் மூலம் பாலின சமத்துவம், பெண்களின் உரிமைகள், முன்னேற்றம் ஆகியவற்றுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆயினும் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் சற்று அதிகரிக்கும்” என்று தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். "ஆண்களைப் போலவே பெண்களுக்கும் 21 வயதை நிர்ணயித்தால் சமத்துவம் ஏற்பட்டு விடும் என்பது மேம்போக்கான எண்ணம், ஆனாலும் சுதந்திரத் தன்மைக்கு இது சற்று உதவி செய்யும்” என்று 100க்கும் அதிகமான அமைப்புகள் மற்றும் 2500 இள வயதினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண் குழந்தைத் திருமணம் ஏற்கனவே குறைந்துள்ள நிலையில், இந்நடவடிக்கை தேவையற்றது, இதற்குப் பதிலாக பெண்களுக்கான பள்ளிக்கல்வி, வேலைகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் கருத்து தெரிவித்துள்ள பெண்கள் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநரான மேரி இ ஜான் கூறும் போது,”மக்கள் தற்போது நன்கு படித்து, வேலைகளுக்குச் சென்று அதன்பின் திருமணம் செய்கின்றனர்.

அதனால் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதால் எந்த மாற்றமும் முன்னேற்றமும் வந்து விடாது, அதே நேரம் ஏழைகள் 18 வயதில் திருமணம் செய்யாமல் 3 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்வதால் அவர்களுக்கு வளமான வாழ்க்கை அமைந்து விடும் என்று கூற இயலாது. இதுபோன்ற மேம்போக்கான அறிவிப்புகளை வெளியிடுவதற்குப் பதிலாக பெண்களின் கல்விக்காக பள்ளிகள், கல்லூரிகளை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்க வேண்டும்" என்றார்.

“வயது வேறுபாட்டு சிக்கல்கள் நம் வரலாற்றில் உள்ளன. ஒரே நாளில் வயது வித்தியாசத்தை சமமாக்கி விட்டால், ஏற்றத்தாழ்வுகள் நீங்கிவிடும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றும் நம் சமூகத்தில் ஆண்களை விட பெண்கள் குறைந்த வயதுடையவர்களாக இருந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. மேலை நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் உடைந்துள்ளன.

ஆனால் நம் நாட்டில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் 18 என்ற குறைந்தபட்ச வயதை மாற்ற வேண்டியதில்லை. பள்ளிப்படிப்பை நிறுத்திய பெண்களை வைத்திருக்கும் ஏழைப் பெற்றோர், பெண்களை வீட்டிற்குள் வெறுமனே இருக்க விடமாட்டார்கள். மூன்றாண்டுகள் வீட்டிற்குள் பெண்கள் இருப்பதால் அவர்களது குடும்ப ஏழ்மை நிலை எந்த வகையிலும் முன்னேறாது.”

“ஆனாலும் நாடு முழுவதும் திருமணம் செய்யும் வயது அதிகரிக்கவே செய்திருக்கிருக்கிறது. அத்துடன் குழந்தைத் திருமணங்கள் பெருமளவுக்கு குறைந்துள்ளன. ராஜஸ்தானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன, அவ்வளவு தான்” என்று ஜான் கூறியிருக்கிறார், இந்த நடவடிக்கையைக் காட்டிலும், பெண்களுக்கான பள்ளி, கல்லூரி கல்விக்கு வழிவகை செய்ய வேண்டும், இதன்மூலம் சிறுவயது திருமணம், ஆரோக்கிய குறைபாடுகளை களையலாம்.

உலகம் முழுவதும் ஆண், பெண் இருபாலருக்கும் திருமண வயது 18 என்றிருந்தது, கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியாவின் ஒப்புதலோடு ஐநா சபையின் பெண் குழந்தைகள் உரிமைகளுக்கான மாநாட்டில், ஒரு குழந்தை பெரியவராக மாறுவதற்கான வயது வரம்பு 18 என நிர்ணயிக்கப்பட்டது. பெண்களுக்கான திருமண வயதை அதிகரிப்பதால் நன்மைக்குப் பதிலாக குற்றவியல் நடவடிக்கைகள் தான் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, குழந்தைத் திருமண தடுப்பு சட்டம் 2006 (பிசிஎம்ஏ)– இன் கீழ் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. தில்லியைச் சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவன கூட்டிணைவாளர்களின் சார்பில் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வில் 2008 முதல் 2017 வரை அளிக்கப்பட்ட 83 உயர்நீதி மன்ற, மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகள், உத்தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அதில் 65 விழுக்காடு வழக்குகளில், வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்த வயது வந்த இரண்டு பேரை பிசிஎம்ஏ தண்டித்திருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 35 விழுக்காடு வழக்குகளில் குழந்தைத் திருமணங்கள் செய்து வைத்த பெற்றோருக்கு சரியான தண்டனை வழங்கப்படாமல், அவர்கள் சட்டங்களின் ஓட்டைகள் வழியே தப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட 83 வழக்குகளில் 56 வழக்குகளை பெண் குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். மீதமுள்ள 14 விழுக்காடு வழக்குகளை மட்டும் தான் குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரி பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

35 விழுக்காடு வழக்குகள் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தொடர்புடையவை, 48 விழுக்காடு வழக்குகள் குழந்தைத் திருமணம் செய்த பெற்றோர், கணவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டவை என்று அந்த அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 52 விழுக்காடு வழக்குகள் வரதட்சணை, உள்ளூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட திருமணங்கள் தொடர்புடையது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில், 2005-2006ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வு 3 (என்எஃப்எச்எஸ்) மற்றும் என்எஃப்எச்எஸ் -4 அறிக்கையின் படி, 15 வயதில் திருமணம் செய்த 20 முதல் 24 வயதுடைய பெண்களின் எண்ணிக்கை 25.4 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக குறைந்துள்ளது.

ஆயினும், கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வின் படி,15 வயதில் திருமணம் செய்த 20-24 வயதுடைய பெண்களின் எண்ணிக்கை 6 விழுக்காடாகவும், 18 வயதில் திருமணம் செய்த பெண்களின் எண்ணிக்கை 26.8 விழுக்காடாகவும், 20 வயதில் திருமணம் செய்த பெண்களின் எண்ணிக்கை 48 விழுக்காடாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.