இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டே செய்தியாளர்களிடம் பேசியதாவது, "புதுச்சேரியில் கரோனா வைரஸ் சமூகத் தொற்றாக மாறவில்லை. அரும்பார்த்தபுரம் சேர்ந்த தனியார் டயர் தொழிற்சாலை ஊழியருக்கு கரோனா பாதிப்பு குறித்து விசாரிக்கப்பட்டதில், அவர் பகுதி நேர தொழில் செய்வதற்காக கோயம்பேடு சென்று வந்துள்ளார் என தெரியவந்தது.
அவருடன் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள், கம்பெனி பேருந்தில் பயணம் செய்தவர்கள், குடும்பத்தாரின் 30 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
மக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் பல பேர் மருத்துவர்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, வரும் 17ஆம் தேதி முதல் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கூடுதலாக காலை 8 மணியிலிருந்து மதியம் 11 மணி வரை சீட்டு பதியலாம். மதியம் ஒரு மணி வரை சிகிச்சை பெறலாம். பொதுமக்கள் சுலபமாக சிகிச்சை பெறும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவரை சந்திக்க கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'மக்களுடன் மக்களாக கலந்தது பெருமையளிக்கிறது' - கரோனா களப்பணியில் திருநங்கைகள்!