ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா (Lohardaga) மாவட்டத்தை அடுத்த ஜல்ஜமேத்ரா (Jhaljamedra) கிராமத்தைச் சேர்ந்த சஹனய் ஓரன் (52) மாந்திரீகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பிர்ஸா என்பவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார், அவரின் இறுதிச் சடங்கில் ஊர்மக்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில், சஹனய் மட்டும் அதில் பங்கேற்காமல் அப்போதும் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சஹனய்தான் தனது மாந்திரீகத்தின் மூலம் பிர்ஸாவை கொலை செய்துள்ளார் என்று முடிவுசெய்து, அவரை மக்கள் ஒன்றுகூடி அடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார்.
அப்போது ஊர்மக்கள் ஒரு பெரிய கல்லை கொண்டு அவர் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவம் இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி மருத்துவனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த அவர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.