ETV Bharat / bharat

'சீரான சுற்றுச்சூழலை தக்க வைக்க கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்' - பிரகாஷ் ஜவடேகர் - கோவிட்-19 நெருக்கடி

டெல்லி: கரோனா வைரஸ் ஊரங்கில் ஏற்பட்டிருக்கும் சீரான சுற்றுச்சூழலை சாதாரண காலங்களிலும் தக்கவைக்க, மிகத் தீவிரமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.

Important to implement environmental rules to sustain gains of lockdown: Javadekar
“சீரான சுற்றுச்சூழலை தக்க வைக்க கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்” - பிரகாஷ் ஜவடேகர்
author img

By

Published : May 18, 2020, 12:14 PM IST

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “உலகையே அச்சுறுத்திவரும் கரோனா பெருந்தொற்றுநோயின் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் எதிர்பாராத வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தொழில்துறை நடவடிக்கைகள், வாகன நடமாட்டம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இதனால் உயிர் சூழலுக்கு அத்தியாவசியமான தேவையான காற்று, நீர் ஆகியவற்றின் தரம் மேம்பட்டுள்ளது. கோவிட்-19 நெருக்கடி காலம் முடிந்த பின்னரும் இந்த நிலையைத் தக்க வைக்க பாடுபட மாநில - யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்துகிறது.

மக்கள் மீண்டும் இயல்பான வாழ்க்கையை தொடங்கும்போது, தற்போதைய மேம்பட்ட சுற்றுச்சூழலை தக்கவைத்துக்கொள்வது சிரமம் என்பது உண்மை தான். ஆனாலும், நாம் மிகவும் கவனத்துடன் செயலாற்றினால் இதனை தக்க வைக்க முடியும்.

சுற்றுச்சூழல் விதிமுறைகளை, மாசுக் கட்டுப்பாட்டுகளை நிர்வகிக்கும் ஒழுங்குமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதன் மூலமாக இந்த சவாலான விஷயத்தை நம்மால் சாதிக்க முடியும். கழிவு மேலாண்மை, தொழில்துறை வெளியேற்றம், ஆற்று நீரின் தரம் போன்றவற்றில் நாம் முன்னேற்றத்தை கண்காணிக்கத் தொடங்க வேண்டும்.

கரோனா ஊரடங்கு ஒலி மாசுபாட்டைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல் காற்றிலும் நீரின் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளது என்று பல்வேறு ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. நம்முடைய பெரும்பாலான அன்றாட நடவடிக்கைகள் நடைபெறும் சாதாரண காலங்களில் கூட நாம் இந்தச் சூழலியலைத் தக்க வைக்க பாடுபட வேண்டும். இயற்கையோடு இணைந்து சிறந்த வாழ்க்கை முறை, சூழலியல் மேலாண்மை உள்ளிட்ட மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

Important to implement environmental rules to sustain gains of lockdown: Javadekar
“சீரான சுற்றுச்சூழலை தக்க வைக்க கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்” - பிரகாஷ் ஜவடேகர்

இயற்கையோடு இணக்கமாக வாழக் கற்றுத் தந்த இந்திய தத்துவ மரபில் வேரூன்றியிருக்கும் நிலையான வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் காப்போடு இணைந்து வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நிர்வாகத்தில் உங்களுடன் சேர்ந்து இயக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பதவியேற்பு: மேலவை மூலம் முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்த தாக்கரே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.