ETV Bharat / bharat

கரோனா: குழந்தைகள் சுகாதாரத்தில் சிறப்பு அக்கறை செலுத்துவோம்!

ஹைதராபாத்: கரோனா நோய்த்தொற்று மனித குலத்தை அச்சுறுத்திவரும் நிலையில், இந்த இக்கட்டான சூழலில் குழந்தைகளின் சுகாதாரம் தொடர்பான அவசியத்தை உணர்த்தும் யுனிசெஃப் அமைப்பின் ஆய்வு தொடர்பான சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

Covid
Covid
author img

By

Published : May 20, 2020, 10:42 AM IST

கரோனா நோய்த்தொற்று மனிதகுலத்தின் வாழ்க்கை, வாழ்வாதாரம், நம்பிக்கைகள், விருப்பம் ஆகியவற்றைப் பாதிக்கிறது. மேலும் மக்களின் பொருளாதாரத்தையும், வணிகத் செயல்பாட்டையும் சிதைப்பதன்மூலம் சர்வதேச சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரோனாவின் தாக்கத்தால் இந்தியாவின் எதிர்காலம் பேரிடராக இருக்கும் என்று யுனிசெஃப் அமைப்பு அண்மையில் எச்சரித்தது. கரோனா பரவியதையடுத்து மலேரியா, போலியோ போன்ற நோய்களில் கவனம் செலுத்த உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் அழைப்புவிடுத்தது.

குழந்தைகளுக்கு கரோனா வைரசினுடைய (தீநுண்மி) தாக்கம் ஒரு மோசமான சூழலை உணர்த்துவதாக யுனிசெஃப் தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. பூட்டுதல் (லாக்டவுன்) காரணமாக, போக்குவரத்து செயல்பாடுகள் பல இடங்களில் முற்றிலுமாக முடங்கின. இதன் காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டு, அடிப்படைச் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை.

ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினியால் குழந்தைகள் இறப்பதால் பெற்றோரின் வருமானம் பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை யுனிசெஃபின் எச்சரிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

118 குறைந்த வளர்ச்சி, வளரும் நாடுகளில் அடுத்த ஆறு மாதங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக நாளொன்றுக்கு ஆறாயிரம் குழந்தைகள் இறக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா, காங்கோ, தான்சானியா, நைஜீரியா, உகாண்டா, பாகிஸ்தான் போன்ற அதிக அளவில் உயிரிழப்புகளைச் சந்திக்கவுள்ள பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது அச்சத்திற்குரியது.

குழந்தைகள் பிறந்து தனது ஐந்து வயதை அடையும்வரை சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்வது சவாலான செயலாகப் பார்க்கப்படுகிறது. சரியான ஊட்டச்சத்து, அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் குழந்தைகளின் அகால மரணத்தை கட்டுப்படுத்துவது அந்த நாடுகளின் பொறுப்பாகும்.

சரியான நேரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்ற யுனிசெஃபின் எச்சரிக்கை இந்தியாவுக்கும் சேர்த்துதான் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

கோவிட்-19 நெருக்கடி காரணமாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மேலும் சுமை அதிகரித்திருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், தி லான்செட் ஜர்னல் ஆகியவற்றின் சமீபத்திய கூட்டு ஆய்வில், மத்திய ஆபிரிக்கா, சாட், சோமாலியா போன்ற நாடுகளில் குழந்தைகளின் சுகாதாரப் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரியவருகிறது. மேற்கொண்ட ஆய்வு 180 நாடுகளில் நடைபெற்ற நிலையில் இந்தப் பட்டியலில் இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துவதாக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாகத் தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் போதிலும், ஒவ்வொரு ஆண்டும் ஏழு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன.

ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரதான திட்டமான 'போஷன் அபியான்', நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் (ஐ.சி.டி.எஸ்.) திட்டங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்வதற்கான நேரமிது. உலகில் உள்ள 177 நாடுகளில் உள்ள 130 கோடி குழந்தைகள் தற்போது பள்ளிகளில் சேர முடியவில்லை.

பள்ளிகளில் மதிய உணவு இழந்து தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 37 நாடுகளில் கிட்டத்தட்ட 12 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்ற புள்ளி விவரம், கரோனா தொற்றின்போது வெளியானது நம்மிடையே பெரிய அளவில் இடரை வெளிப்படுத்துகின்றது.

நாட்டில் 40 விழுக்காடு குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள், வைட்டமின்கள் கிடைப்பதில்லை. இந்தச் சூழ்நிலையில், குழந்தை இறப்பைத் தடுக்க அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கை நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

நிலையான மனித மேம்பாட்டு இலக்குகளை அடைவதில் குழந்தைகள் நலன் ஒரு முக்கிய அங்கமாகும். அமைப்புகளைப் பராமரிப்பது, குழந்தைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைமுறையையும் கவனத்தில்கொள்ள வேண்டியது அரசுகளின் பிரதான கடமையும் பொறுப்பும் ஆகும்.

இதையும் படிங்க: சிறப்பு பொருளாதார அறிவிப்பு குறித்து பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.