ETV Bharat / bharat

'வெள்ளை நாள்', 'கறுப்பு நாள்' கடைப்பிடிக்க ஐ.எம்.ஏ அழைப்பு!

author img

By

Published : Apr 21, 2020, 6:04 PM IST

டெல்லி: நாளை (ஏப்ரல் 22) வெள்ளை நாளாகவும், வியாழக்கிழமை நாடு தழுவிய 'கறுப்பு தினம்' ஆகவும் அனுசரித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய மருத்துவக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு முடிவுகட்ட இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கழகம் திட்டமிட்டுள்ளது.

IMA
IMA

தொடர்ந்து மருத்துவர்கள் தாக்கப்படுவதாலும், அவர்கள் புறக்கணிக்கப்படுவதாலும் இந்திய மருத்துவக் கழகம் நாடு தழுவியப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாளை (ஏப்ரல் 22) வெள்ளை நாளாகவும், வியாழக்கிழமை நாடு தழுவிய 'கறுப்பு தினம்’ ஆகவும் அனுசரித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய மருத்துவக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மருத்துவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு முடிவுகட்ட இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கழகம் திட்டமிட்டுள்ளது.

புதன்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவர்கள் மீது தொடங்கப்பட்ட தாக்குதலுக்கு தக்க நடவடிக்கை எடுக்கவும், மருத்துவர்கள் பாதுகாப்புக்கு உறுதியளிக்கவும் என்பன போன்ற கோரிக்கைகள் வைக்கப்படும்.

அதனை ஏற்காவிடில், மறுதினமான வியாழக்கிழமை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவக் கழகம் எச்சரித்துள்ளது.

கோவிட் -19 நெருக்கடி : வென்ட்டிலேட்டர் உற்பத்தியை தீவிரப்படுத்தும் இந்தியா!

கரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை சமூகம் புறக்கணிப்பது, அவர்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவது, அவர்களைத் தாக்குவது, அவர்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டால் அடக்கம் செய்ய அனுமதிக்காதது போன்ற சம்பவங்கள் தேசத்தில் நடந்து வரும் நிலையில், இந்திய மருத்துவக் கழகம் அதற்கு எதிராக இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.