இந்திய சந்தையில் பட்டியலிடப்படாத மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். (IL&FS).
எல்.ஐ.சி., ஜி.ஐ.சி., யு.ஐ.ஐ., என்.ஐ.சி. உள்ளிட்ட நான்கு பொதுத்துறை வங்கிக்காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ஐ.எல். அண்ட் எஃப்.எஸ்., நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு நிதிச் சேவை அளித்துவந்தது.
ஒருகாலத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்த இந்நிறுவனம், முறையற்ற கடன் சேவையின் காரணமாக, சுமார் 91 ஆயிரம் கோடி ரூபாய் நீண்டகால கடன் சுமையால் நசுக்கப்பட்டு தற்போதுதிவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், இதற்கு கடன் கொடுத்துள்ள பொதுத்துறை நிதி நிறுவனங்களும்பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். நிறுவனத்தில் நடந்த நிதி மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு, நேற்று அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹரி சங்கரனைக் கைதுசெய்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது, நீதிமன்றம் ஏப்ரல் 4ஆம் தேதி வரை அவரை காவலில்எடுத்துவிசாரிக்க ஒப்புதல் அளித்தது.
இது குறித்து தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு கூறுகையில்,ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். நிறுவனத்தின் தலைவராக ஹரி சங்கரன் இருந்தபோது அதிகார துஷ்பிரயோகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, ஐ.எல். அண்ட் எஃப்.எஸ். நிறுவனத்தை நிதிச் சிக்கலில் இருந்து மீட்க, கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைமைஇயக்குநர் யுதெய் கோட்டாக் தலைமையில் ஆறு பேர் கொண்ட இயக்குநர்கள் குழுவை மத்திய அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.