ETV Bharat / bharat

தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ஐஐஎம்- பெங்களூரு - சிறந்த கல்வி நிறுவனம்

பெங்களூரு: மத்திய ஆசியாவின் சிறந்த பி-பள்ளிகளுக்கான எட்யூனிவர்சல் 2020 தரவரிசைப் பட்டியலில் இந்திய மேலாண்மை நிறுவனம்-பெங்களூரு (ஐஐஎம்-பி) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஐஐஎம்-பி
ஐஐஎம்-பி
author img

By

Published : Nov 14, 2020, 8:34 PM IST

Updated : Nov 14, 2020, 8:42 PM IST

மத்திய ஆசியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் எட்யூனிவர்சல் 2020 தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐஐம்- பெங்களூரு முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஐஐஎம்-அகமதாபாத் மற்றும் ஐஐஎம்-கல்கத்தா ஆகியவை இந்தாண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முன்னிலைப் பெற்றுள்ளன.

இந்த விருதுகள் 2020ஆம் ஆண்டின் வருடாந்திர எடுனிவர்சல் 3-டி உலக மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. எடுனிவர்சல் என்பது உலகளாவிய தரவரிசை மற்றும் உயர்கல்வியில் நிபுணத்துவம் பெற்ற மதிப்பீட்டு நிறுவனம் என்று ஐஐஎம்-பி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகளவில் ஆன்லைன் கோர்ஸ்களை நடத்தும் முதல் மேலாண்மை நிறுவனம் என்ற பெருமையை ஐ.ஐ.எம்.-பெங்களூரு பெற்றுள்ளது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பல்கலைக்கழகங்கள் மூலம் மாணவர் பரிமாற்றத் திட்டத்தை மேற்கொண்டுவரும் ஐஐஎம்- பெங்களூருவை எட்யூனிவர்சல் பாராட்டியதாக ஐஐஎம்-பி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.ஐ.எம்.-பெங்களூருவின் இயக்குநர் பேராசிரியர் ரிஷிகேஷா டி கிருஷ்ணன் கூறுகையில், "மத்திய ஆசியாவிலிருந்து முதல் மூன்று பள்ளிகளில் ஐ.ஐ.எம்.-பி இடம்பெற்றிருப்பது பெருமைக்குரியது. தொற்றுநோய் இயல்புநிலையை சீர்குலைத்துள்ள நிலையில், ஐ.ஐ.எம்.-பி செயல்முறைகளை நிர்வகித்துவருகிறது மற்றும் கற்றல் தொடர்ச்சியை குறிப்பிடத்தக்க வகையில் உறுதி செய்துள்ளது.இந்த விருது ஐ.ஐ.எம்-பிஸின் பார்வையை உலக அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக நிர்வகிப்பதில் சிறந்து விளங்குகிறது” எனத் தெரிவித்தார்.

Last Updated : Nov 14, 2020, 8:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.