பிகாரில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்துவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக இருந்தது. மேலும், 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். அதுமட்டுமின்றி வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் மிதக்கின்றன.
இதையடுத்து பிகாரின் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களை வெள்ளத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள மேட்டு பகுதிக்கு சென்று அடைக்கலம் அடைந்துள்ளனர். சிர்னியா, அம்மாடிஹ், சினுவாரா உள்ளிட்ட கிராம மக்கள் கடந்த 15-20 நாட்களாக தாங்களாகவே அமைத்துக் கொண்ட குடிலில் அடைக்கலம் அடைந்துள்ளனர்.
இருந்தபோதிலும் தங்களின் குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி இதுவரை இங்கு எந்த அரசியல்வாதியோ, அலுவலரோ வந்து தங்களுக்கு எந்தவித உதவியும் செய்து தரவில்லை என புலம்புகின்றனர் இக்கிராம மக்கள்.
இது குறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், எங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. எங்களுக்கு உதவ இதுவரை யாரும் வரவில்லை என்றார்.
இதையும் படிங்க...பிகார் வெள்ளம்: 12 மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பேர் பாதிப்பு!