இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில், ஜூன் 15ஆம் தேதி படைகளைப் பின்வாங்கும் நடவடிக்கையின்போது, ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய எல்லைப் பகுதியில், சீனா அமைத்திருந்த கூடாரத்தை நீக்க இந்திய ராணுவம் முயன்றபோது, இந்த மோதல் ஏற்பட்டதாக இந்தியா குற்றஞ்சாட்டியது. இருப்பினும், சீனப் பகுதியில் அத்துமீறி இந்தியா நுழைந்ததே, இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று சீன ராணுவமும் பதிலுக்கு குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், இந்த கல்வான் மோதலில் உயிரிழந்த வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், 'Speak Up For Our Jawans' என்ற பரப்புரையையும் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள காணொலிப்பதிவில், "இந்திய-சீன எல்லையில் இன்று (ஜூன் 26) நெருக்கடியான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு அதன்(வீரர்களைப் பாதுகாக்கும்) பொறுப்பை கைவிட முடியாது.
பிரதமர் கூறியதைப் போல லடாக்கிலுள்ள இந்தியப் பகுதியில், சீனா நுழையவில்லை என்றால், 20 இந்திய வீரர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
நம் நாட்டிற்குள் யாரும் நுழையவில்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால், செயற்கைக்கோள் படத்தைப் பார்க்கும் அனைத்து வல்லுநர்களும் சீனப் படைகள் இந்திய எல்லையில் நுழைந்துள்ளதாகவே தெரிவிக்கின்றனர்.
-
LIVE: Congress President Smt. Sonia Gandhi shares a message for our armed forces. #SpeakUpForOurJawans https://t.co/RVuKKRZJ7u
— Congress (@INCIndia) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">LIVE: Congress President Smt. Sonia Gandhi shares a message for our armed forces. #SpeakUpForOurJawans https://t.co/RVuKKRZJ7u
— Congress (@INCIndia) June 26, 2020LIVE: Congress President Smt. Sonia Gandhi shares a message for our armed forces. #SpeakUpForOurJawans https://t.co/RVuKKRZJ7u
— Congress (@INCIndia) June 26, 2020
மோடி அரசு சீனாவிலிருந்து எப்படி, எப்போது நமது நிலத்தைத் திரும்பப் பெறும்? எல்லையில் நமது நாட்டின் ஒருமைப்பாட்டை சீனா மீறுகிறதா? எல்லையில் இதுபோன்ற பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டை நம்பிக்கையுடன் அழைத்துச் செல்வாரா?" என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்தப் பதற்றமான சூழ்நிலையில் நமது ராணுவத்திற்கு முழு ஆதரவையும் பலத்தையும் அளிப்பதே உண்மையான நாட்டுப்பற்றாக இருக்கும் என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க: சைபர் தாக்குதல் - சீன ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட அரசு சர்வர்