ETV Bharat / bharat

சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களில் 10% பேருக்கு கரோனா! - சமூக விலகல்

சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட கரோனா வைரஸ் கண்டறியும் சோதனையில், 10 விழுக்காட்டினருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

icmr-finds-10-sari-patients-positive-for-covid-19-no-community-transmission-yet

author img

By

Published : Mar 29, 2020, 9:31 AM IST

Updated : Mar 29, 2020, 9:46 AM IST

இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 980ஐ கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, மக்களிடையே சமூக விலகலைக் (சோஷியல் டிஸ்டன்சிங்) கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் பணிபுரியும் கங்காகேதர் பேசுகையில், ''சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 110 பேருக்கு கரோனா வைரஸ் கண்டறியும் சோதனை நடத்தியுள்ளோம். அதில் 10 விழுக்காட்டினருக்கு (11 பேர்) கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த 11 பேரில் மூன்று பேருக்கு வெளிநாடுகளுக்குச் சென்ற எந்தவித பயண விவரமோ அல்லது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடனான தொடர்போ இல்லை. இவர்களில் மூவர் சென்னை, உத்தரப் பிரதேசம் , மகாராஷ்டிரா பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

அதேபோல் இவர்கள் சமூக பரவலால் பாதிக்கப்பட்டார்களா என்பதும் உறுதிசெய்யப்படாமல் உள்ளது. இதுவரை இந்தியாவில் சமூகப் பரவல் காரணமாக கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் என யாரும் இல்லை. அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம். வழக்கம்போல் சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள்.

இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட கரோனா கண்டறிதல் மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த மையங்களில் உள்ள சோதனைக் கருவிகள் மக்களின் கைகளுக்குச் சென்றால், தேவையில்லாத பீதியை உருவாக்கும். அதனால்தான் அரசு, சில தனியார் அமைப்புகள் மட்டும் அதனைக் கையாண்டுவருகின்றன'' என்றார்.

மேலும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 24ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘சோஷியல் டிஸ்டன்ஸ்’ என்றால் என்ன?

Last Updated : Mar 29, 2020, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.