இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக, ஹரியானா மாநிலத்தின் சோனிபட் பகுதியில் உள்ள கேஜிபி நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது. இந்தக் கோளாறு குறித்து ஹெலிகாப்டர் விமானி, உடனடியாக எமர்ஜென்சி அலாரத்தை அழுத்தி, தகவல் தெரிவித்ததையடுத்து, ஹிண்டன் விமான தள அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுது 90 நிமிடங்களில் சரிய செய்யப்பட்ட பின், செல்ல வேண்டிய இடத்திற்குப் பறந்தது. பின்னர் நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்துகள் அனுமதிக்கப்பட்டன.
ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்ட சம்பவம், அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்ததையடுத்து, பொதுமக்கள் பலரும் அப்பகுதியில் கூடினர்.
இதையும் படிங்க: அமெரிக்கா போர் விமானம் கடலில் விழுந்து விபத்து - விமானியை தேடும் பணியில் பிரிட்டன்!