இந்திய விமானப்படைக்கு ஃபிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன.
முதற்கட்டமாக 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்தடைந்தன. அவை ஹரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்தில் கடந்த செப்டம்பர் 10-ந்தேதி நடந்த நிகழ்ச்சியில் விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.
இந்த விமானம் லடாக் மற்றும் லே பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மேலும் 5 ரபேல் போர் விமானங்கள் அடுத்த நான்கு வாரத்திற்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான நேரடி ஆய்வுக்காக இந்திய விமான படையை சேர்ந்த குழுவினர் பிரான்ஸ் நாட்டிற்கு விரைந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டிற்குள் 36 ரஃபேல் ஜெட் விமானங்களின் இந்தியா வந்தடையும் என கூறப்படுகிறது. அதற்கான எற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், கிழக்கு பிரான்சில் உள்ள செயிண்ட்-டிஜியர் விமான தளத்தில் ரஃபேல் ஜெட் விமானங்கள் குறித்து ஐ.ஏ.எஃப் விமானிகள் குழுவினர் பயிற்சி பெற்று வருகின்றனர்.