ETV Bharat / bharat

இந்திய விமானப்படை விமானம் தேடுவதில் சிக்கல்

டெல்லி: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானத்தை தேடும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்றுவருகிறது. இதில் பாதுகாப்புப்படையினரின் சேர்ந்து இஸ்ரோ ஈடுபட்டுவருகிறது.

plane
author img

By

Published : Jun 5, 2019, 2:00 PM IST

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மெச்சுக்கா பாதுகாப்புப்படை தளத்திற்கு இந்திய விமான படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் ஒன்று, எட்டு விமானப்படை வீரர்கள், ஐந்து பயணிகள் என் மொத்தம் 13 பேருடன் நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் அங்கிருந்து கிளம்பி 35 நிமிடங்களுக்கு பின் விமான கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் விமானத்தை தேடும் பணியில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30, சி-130 சிறப்பு போர் விமானங்கள், ஏ.எல்.ஹெச். பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

எனினும் நேற்று விமானம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவும் செயற்கைக்கோள் உதவியுடன் விமானத்தை தேடும் பணியில் இணைந்தது. இதுதவிர இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான பி8ஐ ரக விமானமும் தேடுதல் பணிக்கு விரைந்தது.

இன்று மூன்றாவது நாளாக மாயமான விமானத்தை தேடும் பணியில் விமானப் படையினர், ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானம் காணாமல்போன அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மெச்சுக்கா அடர்ந்த வனப்பகுதி என்பதால் விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் சற்று கடினமாக உள்ளது.

இதனால் அங்குள்ள உள்ளூர் கிராம மக்களுடன் சேர்ந்து மீட்புக் குழுவினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் தற்போது வரை விமானம் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்புப்படை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.