நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, "நாட்டில் ஒரு புதிய நிறுவனம் வந்துள்ளது. அது 'அந்தோளன் ஜீவி' (இயக்கத்தால் வாழ்பவர்கள்). போராட்டம் நடக்கும் இடத்திலெல்லாம் அவர்களைக் காணலாம், அது வழக்கறிஞர்கள், மாணவர்கள் அல்லது தொழிலாளர்களின் கிளர்ச்சியாக இருந்தாலும், அவர்கள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். அவர்களால் அந்தோளன்' (இயக்கம்) இல்லாமல் வாழ முடியாது, நாம் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
டெல்லியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை, அந்தோளன் ஜீவி எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
-
I am a proud andolan jeevi. The quintessential andolan jeevi was Mahatma Gandhi.#iamanandolanjeevi
— P. Chidambaram (@PChidambaram_IN) February 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am a proud andolan jeevi. The quintessential andolan jeevi was Mahatma Gandhi.#iamanandolanjeevi
— P. Chidambaram (@PChidambaram_IN) February 10, 2021I am a proud andolan jeevi. The quintessential andolan jeevi was Mahatma Gandhi.#iamanandolanjeevi
— P. Chidambaram (@PChidambaram_IN) February 10, 2021
இந்நிலையில், பிரதமரின் அந்தோளன் ஜீவி குற்றச்சாட்டுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்வீட்டில், " அந்தோளன் ஜீவியாக இருப்பதில் பெருமைப் கொள்கிறேன். மிகச்சிறந்த அந்தோளன் ஜீவி மகாத்மா காந்திதான்" எனப் பதிவிட்டுள்ளார்.