ETV Bharat / bharat

பேப்பர் கப்பில் 'நானும் காவலாளி' விளம்பரம்: உடனடியாக திரும்ப பெற்ற ரயில்வே நிர்வாகம் - நானும் காவலாளி

டெல்லி: சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட தேநீர் கப்பில் பிரதமர் மோடியின் நானும் காவலாளி என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருந்ததால், அவசர அவசரமாக அந்த கப்புகளை ரயில்வே நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

ரயில்வே நிர்வாகம்
author img

By

Published : Mar 29, 2019, 11:40 PM IST

புது டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம், காத்கோடம் நகருக்கு காத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு தேநீர், சூப் வழங்க பயன்படுத்தப்பட்ட காகித கப்பில், பிரதமர் மோடி சமீபத்திய முழக்கமான " நானும் காவலாளி" என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

நாட்டில் தேர்தல் நடத்தை விதமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, ரயில்வே துறைச்சார்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்படுவதாக தேநீர் கப்பை புகைப்படம் எடுத்து சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படமும், காத்கோடகம் சதாப்தி எக்ஸ்ரயிலில் வழங்கப்பட்டது என்கிற வாசகமும் வைரலானது.

இதையடுத்து, இந்த விவகாரம் ரயில்வேதுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் சங்கல்ப் அமைப்பு என்று தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த கப்புகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக நானும் காவலாளி என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட அனைத்து காகித கப்புகளையும் ரயில்வே அதிகாரிகள் அவசர அவசரமாக திரும்ப பெற்றனர்.

இதுக்குறித்து ஐஆர்சிடிசி செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "இதுபோன்ற வாசகங்கள் எந்தவிதமான உள்நோக்கமும் இன்றி, எங்களை அறியாமல் விளம்பரம் செய்யப்பட்டுவிட்டது. இந்த காகித கப்புகளை வினியோகம் செய்த சேவைதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது " என அவர் தெரிவித்தார்.

Intro:நீங்கள் டீக்கடையில் டீ குடித்தால் நாங்கள் டீக்கடையே வைத்து நடத்தியவர்கள் - பன்னீர்செல்வம்

Body:நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.எல்.எஸ். காளியப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குச்சேகரிக்க நாமக்கல் பூங்கா சாலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் மத்தியில் அதிமுக பாஜக ஒரு கட்சி ஆளும் திமுக காங்கிரஸ் ஒரு கட்சியாகும் போட்டியிடுகிறது. மத்தியில் பாஜக தலைமையில் நல்லாட்சி தொடர்வது போல் தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் பாஜக அரசு நல்லாட்சி செய்தார்களாஜஎன்பதை உறுதிசெய்யும், எடை போடும் நேரம் இந்த தேர்தல்.

காங்கிரஸ் திமுக ஆட்சியில் மக்களுக்காக என்னென்ன திட்டங்கள் செய்தனர் என கேள்வி எழுப்பினார். சேது சமுத்திரம் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து பல கோடி ரூபாய் செலவு தான் செய்கிறார்கள். இந்த திட்டம் சுயநலத்திற்காக போடப்பட்டதிட்டமாகும்.

காவிரி பிரச்சினையில் கருணாநிதி திமுக ஆதரவாக இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுவே தமிழக மக்களுக்கு அவர் செய்த மிகப்பெரிய துரோகம். தொலைநோக்குத் திட்டம் மூலம் 15 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த நடக்கும் நடவடிக்கையாகும். வரும் 2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் குடிசை இல்லா மாநிலமாக உருவாகும்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கி வைத்தார்.எடிப்பாடியார் ஆட்சியின் மூலம் தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்கி வருகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என ஸ்டாலின் கூறுகிறார். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்டு சிறப்பாக செயல்படும் ஒரே கட்சி அதிமுக தான் . அதிமுக கட்சியை காணாமல் போகும் என்று ஸ்டாலின் கூறுவது நகைப்பிற்குள்ளாக்கிறது.

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் சிறப்பான ஆட்சியை நடைபெற்று வருகிறது. பிறநாடுகள் நம்மைப் பார்த்து பயப்படும் வகையில் வல்லரசு நாடாக இந்தியா உள்ளது என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Conclusion: இந்த பிரச்சாரத்தின் போது அமைச்சர் தங்கமணி,டாக்டர் சரோஜா,வைகைச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.