தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த வைர வியாபாரி கோட்டி ஸ்ரீகாந்த். இவர் ஒரே மோதிரத்தில் 7 ஆயிரத்து 801 வைரக்கற்களை பதித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், "இந்த மோதிரத்திற்கு 'டிவைன்-7801' என பெயர் சூட்டியுள்ளேன். இது ஆறு இதழ்கள், ஐந்து வரிசைகளில் எட்டு இதழ்கள் மற்றும் மூன்று மகரந்த தானியங்களைக் கொண்டுள்ளது. இந்த மோதிரம் தயாரிக்க பதினொரு மாதங்கள் ஆனது. இதன் மூலம் எனது கடைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது" எனத் தெரிவித்தார்
இந்த மோதிரத்தை நவம்பர் மாதத்தில் ஏலம் விட நிறுவனத்தின் நிர்வாகிகள் சந்துபாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் மும்பையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், ஒரே மோதிரத்தில் 7 ஆயிரத்து 777 வைரக்கற்களை பதிந்திருந்தது தான் கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது.