ஹைதராபாத் விமான நிலையத்தில், இன்று அதிகாலை பயணி ஒருவரிடம் மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்.) சோதனை மேற்கொண்டபோது சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை
இதையடுத்து, அந்தப் பயணியிடம் பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த வெளிநாட்டுப் பணத்தை ஜி 9 459 விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
வெளிநாட்டு பணத்தின் மதிப்பு?
இதைத் தொடர்ந்து, அவற்றைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல்செய்தனர். மேலும் அதில், அமெரிக்க டாலர், ஓமானி ரியால், சவுதி ரியால், கட்டார் ரியால் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்நிய செலாவணி 32 லட்சத்து 53 ஆயிரத்து 274 ரூபாய்க்கு சமம் எனப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்