உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அம்ரோஹா பகுதியில் வசிக்கும் தனது தாயாரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அச்சமயத்தில், கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதால், அப்பெண்ணால் வீட்டிற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கணவர் மனைவியை தொடர்புகொண்டு வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் மனைவியோ, காவல்துறையினர் அனுமதி இல்லாமல் வர முடியாது எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த கணவர், நான் அனுமதி கடிதம் வாங்கித் தரேன் நீ கிளம்பி வா என நச்சரித்துள்ளார். கரோனா அச்சம் இருப்பதால் நான் இங்கயே இருக்கிறேன் என மனைவி கூறியுள்ளார். மனைவியின் உறவினர் மூலம் சமாதானப் படுத்தி கூட்டிச்செல்ல கணவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது.
இந்நிலையில், மனைவியை வீட்டிற்கு அழைத்து வர நேரடியாக களத்தில் இறங்கிய கணவர், காவல்துறையிடம் தற்போதையை நிலவரத்தை கூறி அனுமதி கடிதத்தை கேட்டுள்ளார். அதில், எனது தாயாரின் உடல்நிலை மோசமாக உள்ளது, மருமகளை பார்க்க வேண்டும் என தாயார் ஆசைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து எஸ்பி யமுனா பிரசாத் கூறுகையில், "இது தனிப்பட்ட வழக்கு அல்ல. இதைப் போல் பல மாவட்டங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள், குடும்பத்தை பார்ப்பதற்கு சொந்த ஊர் செல்ல அனுமதி கோரியுள்ளனர்., முழு ஊரடங்கு உள்ள நிலையில், அரசின் உத்தரவு இல்லாமல் அனுமதிக்க முடியாது" என்றார்.
இதையும் படிங்க: பூட்டிய கடையைத் திறந்து மது விற்பனை - மேலாளருக்கு வலை வீச்சு!