கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.சி.நகரைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களில், கணவர் கார் ஓட்டுநராகவும், அவரது மனைவி ஓரியன் மாலில் விற்பன்னராகவும் பணிபுரிகிறார்.
இந்நிலையில், அப்பெண்ணின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து ஆதிச்சுஞ்சனகிரி மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், தகவல் அறிந்த அப்பெண்ணின் கணவர், தனது செல்போனை அணைத்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.
நேற்று (ஆக.9_ இரவு அப்பெண் வீட்டில் உயிரிழந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் அப்பெண்ணிற்கான இறுதிச் சடங்கு கரோனா அலுவலர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. தலைமறைவாகவுள்ள கணவருக்கும் கரோனா தொற்று பரவியிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறை அலுவலர்களும் காவலர்களும் தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.