பிறமாநிலங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் பணமில்லாமல் ஊரடங்கு நேரத்தில் சிரமப்பட்டு வந்தனர். இதனால் வாழ்வாதாரம் இழந்த அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு லாரியிலும், நடந்தும், பிற வழிகளிலும் செல்லும் சூழல் நிலவியது.
இந்தப் பிரச்னையைக் கருத்தில்கொண்டு மத்திய அரசானது மாநில அரசுகளே தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியது. இதனால் சிறப்பு ரயில்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் சென்றனர்.
இந்நிலையில் மாலை 4 மணியளவில் மீரட் ரயில் நிலையத்துக்கு, பிகார் மாநிலம் செல்லும் ஷ்ராமிக் சிறப்பு ரயில் வருகிறது. ஆனால், ரயிலில் செல்ல நூற்றுக்கும் மேற்பட்ட பிறமாநிலத் தொழிலாளர்கள் திரண்டதால், மீரட் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்தது.
இந்தச் சூழ்நிலையில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற முடியாத சூழல் நிலவியதால், அங்கு பணியில் இருக்கும் அலுவலர்கள் செய்வதறியாது திணறினர். எனினும், ரயில் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக இருப்பதாகவும்; ஒவ்வொரு தொழிலாளருக்கும் முகக் கவசங்கள், உணவு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... செல்லுபடியாகாத பாஸ்டேக் அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம்!