பிகார் மாநிலத்தில் உள்ள போஜ்பூர் மாவட்டத்தின் அரா நகரின் தராரி என்ற கிராமத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட வௌவால்கள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, கால்நடை வளர்ப்புத் துறைக்கு அக்கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த அம்மாநில கால்நடை வளர்ப்பின் மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த வௌவால்களின் உடல்களை பாட்னாவில் உள்ள ஆய்வகத்திற்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மருத்துவக் குழு தெரிவிக்கையில், “அதிகப்படியான வெப்பம் அல்லது பூச்சிக்கொல்லி மருந்து, வௌவால்கள் உயிரிழந்திருக்க காரணமாக இருக்கலாம். உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே இதுகுறித்து தெளிவாக கூற முடியும்” என்றனர்.
மேலும், மரங்களில் போதிய தண்ணீர் விடுமாறு கிராம மக்களுக்கு வனத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வௌவால்களின் உடல் ஆறடி ஆழத்திற்கு குழி தோண்டி பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சுகாதாரமற்று செயல்படும் அரசு சிறப்பு கரோனா மருத்துவமனை!