ETV Bharat / bharat

ஐநாவில் எழுப்பப்படும் காஷ்மீர் பிரச்னை! - காஷ்மீர் விவகாரம்

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இருக்கும் உயிர்நாடி பிரச்னையான காஷ்மீர் விவகாரம் ஐநாவில் எம்மாதிரியான திருப்பங்களை சந்தித்தது என்பது குறித்த சிறப்பு தொகுப்பு.

Kashmir Issue
author img

By

Published : Sep 25, 2019, 12:00 AM IST

இந்திய பிரதமரான நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கானும் ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 27ஆம் தேதி உரையாற்ற உள்ள நிலையில், காஷ்மீர் பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்னை கடந்து வந்த பாதை குறித்து காண்போம்.

காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 1948 முதல் 1971ஆம் ஆண்டு வரை 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜம்மு-காஷ்மீரில் பழங்குடியினர் படையெடுத்ததைத் தொடர்ந்து, 1948ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஐநாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக புகார் அளித்தது. இதனை மறுத்த பாகிஸ்தான், காஷ்மீரை ஆக்கிரமிக்க இந்தியா முயற்சிக்கிறது என குற்றஞ்சாட்டியது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அமைதி காக்கும்படி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஜனவரி 17ஆம் தேதி 1948ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றுகிறது. ஐநா அமைக்கும் குழு மத்தியஸ்தராக செயலபட இருநாடுகள் ஒத்துக் கொள்கிறது.

காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி அறிந்து கொண்டு தீர்வு காண மூன்று பேர் கொண்ட குழுவை ஐநா அமைத்து தீர்மானம் நிறைவேற்றியது.

பாகிஸ்தான் படைகள், பழங்குடியினர்கள், பெருமளவு இந்திய படைகள் சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து வெளியேறவும், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், ஐநா தலைமையில் ஜம்மு-காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. சட்டம் ஒழுங்கை காக்க சிறிய அளவிலான இந்திய படைகள் அங்கிருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜநா அறிவுரைப்படி இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஜனவரி 1ஆம் தேதி 1949ஆம் ஆண்டு அறிவிக்கிறது. பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்று ஜம்மு-காஷ்மீர் ஐநா கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தலைவர் மேக்நவுடன் தலைமையில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. மூன்று பேர் கொண்டு குழு ஒருவர் கொண்ட குழுவாக மாறியது. ஐநா பிரதிநிதி திக்சன் ஜம்மு-காஷ்மீரில் பகுதி வாரியாக பொதுவாக்கெடுப்பு நடத்த ஆலோசனை கூறினார். அந்த யோசனையை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் நிராகரித்தது. இறுதியில் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியைத் தழுவியது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த உருவான குழு காலவதியானது. பொதுவாக்கெடுப்பு மூலம் காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண ஐநா பாதுகாப்பு சபை மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரால் 1960களில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதை ஐநா குறைத்துக் கொண்டது. அமெரிக்கா, சோவியத் யூனியன் நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் விளைவால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் செப்டம்பர் 29ஆம் தேதி 1965ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை அறிவித்தது. சோவியத் யூனியன் தலையிட்டால் இரு நாடுகளுக்கு இடையே தாஸ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது.

1971ஆம் ஆண்டு நடந்த வங்கதேச போரின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து காஷ்மீர் பிரச்னை இருநாடுகளின் விவகாரம் இதில் தலையிட ஐநாவுக்கு உரிமையில்லை என இந்திய தெரிவித்தது. ஆனால், சிம்லா ஒப்பந்தத்தால் ஐநா தலையீடு இருக்கக் கூடாது எனக் கூறும் இந்தியாவின் வாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துவருகிறது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/state/jammu-and-kashmir/how-kashmir-played-out-at-the-united-nations/na20190924150927167

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.