ETV Bharat / bharat

இந்திய நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளில் ஒரு உண்மையான தாக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும்? - EFFECT on malnutrition

எழுத்தாளர், ஸ்வேதா காண்டெல்வால், தலைவர், ஊட்டசத்து ஆராய்ச்சி மற்றும் துணை பேராசிரியர், இந்திய பொதுசுகாதார அறக்கட்டளை - கட்டுரையில் உள்ள கருத்துகள் அவரது சொந்தக்கருத்துகளாகும்.

How can we make an EFFECT on malnutrition in India Opinion Article by Shweta Khandelwal, PHFI Shweta Khandelwal malnutrition Article எழுத்தாளர் ஸ்வேதா காண்டெல்வால் கட்டுரை ஸ்வேதா காண்டெல்வால் இந்திய நுண்ணூட்டச்சத்து குறைபாடு குறித்த கட்டுரை ஸ்வேதா காண்டெல்வால் இந்திய நுண்ணூட்டச்சத்து EFFECT on malnutrition Shweta Khandelwal
How can we make an EFFECT on malnutrition in India
author img

By

Published : Feb 23, 2020, 11:27 PM IST

அண்மைகால நுண்ணூட்டச் சத்து தொடர்பான ஆய்வுகள், (தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-4 ,ஒருங்கிணைந்த தேசிய ஊட்டச்சத்து ஆய்வு) இந்தியாவின் நுண்ணூட்டசத்துகுறைபாடு தொடர்ந்து அதிக சுமையாக இருப்பதை, அதிகரித்து வரும் அதீத எடை உடல் பருமன் சுமையையும் எடுத்துக் காட்டும் அதே வேளையில், நமது நாட்டின் 71வது இந்திய குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பங்கேற்ற ஒரு நிகழ்வும் நடந்தது.

நாற்பது ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்தில் வளர்ச்சி குறைபாட்டின் விகிதத்தை 55 சதவிகித த்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைத்து பிரேசில் ஒரு சாம்பியன் ஆனதை கண்டு ஊட்டசத்து சமூகம் உற்சாகமாக இருந்தது. கூடுதலாக, அந்நாட்டில் வளர்ச்சி குறைபாடு குழ்ந்தைகள் எண்ணிக்கை அதிவேகத்தில் குறைந்தது.

பிரேசில் இதனை எப்படி செயல்படுத்தியது? வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதற்கான அடிப்படைக்காரணங்கள் என்ன என்று பிரேசில் ஆய்வு செய்தது. உணவு போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை, பெண்கள், குழந்தைகளுக்கான போதுமான சுகாதாரப் பாதுகாப்பு இல்லை, சுகாதார சேவை குறைபாடு, ஆரோக்கியமற்ற சூழல் ஆகிய முக்கியமான காரணிகள் அடையாளம் காணப்பட்டன.

பெரிய அளவுக்கு இந்தியாவும் இந்த கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறது என்பதையும் நிச்சயமாக இது நமக்கு நினைவூட்டும். இதர நாடுகளின் தீர்வுகளை எடுத்துக் கொள்வது அல்லது அதனை நமது பரந்த நிலப்பரப்பில் செய்து பார்ப்பது நேர்மையற்றதாக இருக்கலாம். வெறுமனே, வெட்டி ஒட்டும் அணுகுமுறை, கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.

ஆனால், கவனத்துடன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப அதனை மேற்கொள்ளுதல் என்பது நமக்கு உதவுவதாக இருக்கும். இதில் இருந்து நான் என்ன செய்ய விரும்புகின்றேன். புதிதாக ஒன்றும் அல்ல. அனைத்து விதமான ஊட்டசத்து குறைபாட்டையும் இல்லாமல் செய்வதற்கான அரசின் நோக்கமான ஊட்டசத்து குறைபாடு இல்லாத இந்தியா-2022 என்ற அரசின் கண்ணோட்டம் அதிக திறன் கொண்டதாக மற்றும் எல்லா மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

பல்வேறு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்கான நமது நடவடிக்கைகள் தொடர்பான நமது முயற்சிகள் உண்மையான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், சிலவற்றில் வலுவான யுக்திகள் தேவைப்படுகிறது என்பதே என்னுடைய நோக்கமாகும்.

அ) ஆதாரம்-உயர்தரமான துல்லியமான புள்ளிவிவரங்களை பெறுவதற்கான கருவிகளில், நிகழ்கால செயல்களை மேம்படுத்துவதற்கான நுட்பம், தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துதல். இது தவிர பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பிடும் செயல்முறைகளும் இந்த இடைவெளிக்கு துணைநிற்கும். செயல்கள் சரியான திசையில் செல்வதற்கு உதவ வேண்டும்.

ஆ) உணவு முறைகள்-ஆரோக்கியமான மக்கள் தொகைக்கு முக்கியமான தொடர்புகளில் ஒன்றாகும். இப்போதைய உணவு முறை, ஆரோக்கியமற்ற உயர் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பின் அதிகரிக்கும் நுகர்வுக்கு ஆதரவு அளிப்பதாக இருக்கலாம். உள்ளூரில், பருவகாலங்களில் தூய்மையானதாக கிடைக்கும் வெவ்வேறு விதமான தானியங்கள், காய்கறி மற்றும் பழங்களின் மூலம் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தரக்குறைவு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. நமது தேசிய ஊட்டசத்து திட்டங்கள், நுண்ணூட்ட சத்து குறைபாட்டைப் போக்கும் வகையில் வலுப்படுத்தப்பட்ட தானியங்கள் பிரதான உணவுகளை உபயோகிப்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது.

ஆனால், நாம் நமது நாட்டின் பாரம்பர்ய உணவுகள் உபயோகத்தை பிரபலப்படுத்துவோம் குறிப்பாக நமது இளம் தலைமுறையினர் நீண்டநாட்கள் வாழ, நமது வீடுகளில், நமதுஉணவுத்தட்டுகளில் மாறுபட்ட இந்திய உணவு வகைகளை மீண்டும் கொண்டு வருவோம்.

இ)நிதி உதவி - பணம் இல்லாமல் ஒன்றும் செயல்படாது. பொது சுகாதாரம் மற்றும் நுண்ணூட்ட சத்து திட்டத்துக்கு தொடர்ச்சியான முன்னுரிமையாக நிதி இருக்க வேண்டியது முக்கியமானது என்பது மட்டுமல்ல, நிதிமுறைகளைப் பயன்படுத்தி, மக்களை நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும் ஆரோக்கிய விருப்பங்களை நோக்கி உந்துவதும் ஆகும்.

வறுமை ஒழிப்பு, பாலின மற்றும் வருவாய் சமமின்மையை சரிசெய்வதற்கான உத்தரவாதம் அளிக்கக்கூடிய நன்றாக கட்டமைக்கப்பட்ட ஏழைகளுக்கான கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசால் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், உறுதியான போதுமான வருவாய் பகிர்ந்தளிப்பு, சுகாதார, நுண்ணூட்ட சத்துகள் சேவைகள் கிடைப்பதை அதிகரித்தல் ஆகியவைதான் ஒதுக்கப்பட்ட பிரிவினர் வாழ்வில் உண்மையில் ஒளியேற்றுவதாக இருக்கும். பயனாளிகள் நலனில் ஊழல், மோசமானபொறுப்புடைமை விரைவாக கண்டறியப்பட்டு அகற்றப்பட வேண்டும்.

ஈ)தனிச்சிறப்பு வாய்ந்த தாய்பால் அளித்தல் மற்றும் குழந்தைகள் இளம்குழந்தைகளுக்கு உணவளித்தல்: அரசாங்கத்திடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புகளை கணக்கிடமுடியும், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு இளம் குழந்தைகளுக்கு உணவளிப்பது உகந்ததாக தனிப்பட்ட பொறுப்புடைமை கொண்டதாக இருக்க வேண்டும்.

எனினும், வெளி சூழல் காரணிகள், (குடும்பத்தின் பன்முகத்தன்மை, சமூக பொருளாதார சூழல், அணுகல் மற்றும் வசதி, ஆதரவான பணிக்கொள்கைகள் உள்ளிட்டவை)அந்த நடைமுறைகளை வடிவமைப்பதாக இருக்கலாம். 7 சதவிகிதத்துக்கும் குறைவான இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போதுமான அளவு உணவு மற்றும் ஊட்டம் அளிக்காமல் இருப்பதற்கு எந்தகாரணமும் இல்லை.

ஆரம்ப நாட்களில் நுண்ணூட்டசத்து குறைபாடு இருக்கிறதா என்பதை காணமுடியாது. பல பராமரிப்பாளர்கள், சரியான ஊட்டச்சத்து அடர்த்தி, பன்முகத்தன்மை, கால இடைவெளி, அளவு உள்ளிட்டவற்றை கொண்டு உணவளிக்கவில்லை என்பதை உணர்வதில்லை. நமது சமூகத்தில் குழந்தைகளுக்கு தனிச்சிறப்பு வாய்ந்த தாய்பாலை புகட்டுவது என்பது குறுகிய காலகட்டத்திலேயே முடிந்து விடுகிறது. முறையான உணவு அளிப்பதும் தாமதமாகத் தொடங்குகிறது.

மீண்டும், மீண்டும் தொற்று ஏற்படுவதைத் தடுப்பதில் சுகாதாரமான உணவு தயாரிப்பு, சுத்தமான சுற்றுச்சூழல், சரியான நோய்திறன் எதிர்ப்பு ஆகியவை முக்கியமானதாகும். இதில் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். (குறிப்பாக ஒட்டுமொத்த வளர்ச்சியில் மற்றும் மூளை வளர்ச்சியில்) முதல் ஆயிரம் நாட்களில் பெரிய அளவுக்கு செயலைத் தவிர்க்க முடியாது.

இந்த உணவு இடைவெளியில் மற்றொரு சிக்கல் என்பது, பசி மற்றும் ஊட்டச்சதுக்குறைபாட்டைப் போக்க குறுகிய பார்வை கொண்ட விரைவான திருத்தங்களை மேற்கொள்வதாகும். தானியங்களை மட்டும் குறைத்தல் (தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் வழியே) கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் கொடுத்தல்,(வீட்டின் முறைப்படி, மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி உணவு உள்ளிட்டவை) மிகக்கடுமையான ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கும் இலக்கை நாம் அடையலாம்.

ஆனால், ஆரம்பகால தொற்றா நோய்களின் இலக்காக அவர்கள் மாறுவதை நோக்கி நாம் அவர்களை உறுதியாக தள்ளுகின்றோம். எனவே, ஒரு வகையிலான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து இன்னொரு வகைக்கு முன்னெடுப்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பழங்கள், பச்சைக்காய்கறிகள், முட்டைகள், பருப்பு வகைகளை அறிமுகம் செய்வதில் சில மாநிலங்களில் முன்னேற்றம் தெரிகிறது. ஆனால், இது இன்னும் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

உ) ஒருங்கிணைப்பு மற்றும் திறன் கட்டமைப்பு: நுண்ணூட்டசத்து வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் தண்ணீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, விளம்பரம், நோய்தடுப்பு, விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட இதர துறைகளுடன் திடமான முழுமையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வேண்டியது என்பது இந்த ஊட்டச் சத்து குறைபாடு தீர்க்கும் புதிரில் ஒரு முக்கியமான பகுதியாகும். பல களங்கள், துறைகளில் பல முன்னெடுப்பாளர்களை ஒருங்கிணைத்து ஒரு கொக்கி போல,குறிப்பிட்ட நோக்கத்துக்காக பணியாற்ற வேண்டும். இணை உரிமை, பொறுப்புடைமை, முழுமையான, மேன்மையான செயலுக்கான நேரத்துக்கு ஏற்ற விரிவான ஒருங்கிணைப்பு, பெருந்தன்மையுடன் உண்மையை ஏற்றல், சலுகைகள் உள்ளிட்டவை ஒரு பெரும் அளவுக்கு உதவுவதாக இருக்கலாம்.

திறன் குறைபாடுகளுக்கு தீர்வு காணுதல், காலியிடங்களை நிரப்புதல், நியமனங்களில் தாமத்தைத் தவிர்த்தல், உரிய நேரத்தில் பதவி உயர்வுகள் அளித்தல், குறுகிய கால பயிற்சி, செயல் திறன் மேம்பாடு உள்ளிட்டவை பயனுள்ள தொடக்கப் புள்ளிகளாக இருக்கலாம். அமைப்பு முறையில் திறன் இன்மையை சமாளித்தல். கலந்தாலோசனை செய்து உள்ளூர் பிரச்னைகளுக்கு உள்ளூர் தீர்வுகளை உருவாக்குதல்.

ஊழியர்களின் உந்துதலை அதிகப்படுத்துதல், மீண்டும், மீண்டும் வேலை செய்வதை தவிர்த்தல், முன்வரிசைத் தொழிலாளர்கள் முதல் பல நபர்களுக்கு பதில் அளிக்கும் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்த திறன் கொண்ட ஊழியர்களால் சமாளிக்க முடியும். ஆவணப்படுத்தல் பணிகாரணமாக ஆவணங்கள் ஆய்வில் அங்கன்வாடிகளில் முன்பருவ கல்வியை அறிவுறுத்துவதற்கும் நடத்துவதற்குமான நேரம் கால்பங்காக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (மீண்டும், மீண்டும் உள்ளீடு செய்தல், அறிக்கை தயாரித்தல்)

ஊ) ஊட்டசத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைக்கான கூறுகள், தொழில்நுட்பத்தில் வியத்தகு மாற்றங்கள்; அரசு மற்றும் தனிப்பட்ட இரண்டு நிலைகளிலும் நுண்ணூட்டசத்து துறைபோன்றவற்றில் வேகமான வளர்ச்சி மற்றும் முன்னெடுப்புக்கு தொழில்நுட்பமானது உண்மையில் உதவுவதாக இருக்கும்.

இன்னொரு வகையில், தொழில்நுட்பமானது, மக்கள் சிறந்த மற்றும் அறிந்து கொண்ட விருப்பங்களை பெற உதவுகிறது. மறுபுறம் இது கொள்கை வகுப்பாளர்களுக்கான சமூக ஆதரவு அளிக்க மக்கள் இயக்கத்தின் பங்கேற்பு உரிமையை வெளிக்கொணர சமூக ஊடகத்தின் சக்தியை வழங்குகிறது.

நடத்தை மாற்றங்களில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் உயர்தரமான தொழில்நுட்பங்களைக் கொண்ட செயல்களில் நாம் முதலீடு செய்ய வேண்டும். அறிவை செயலாக மாற்றுவதற்கான நிலையான நடைமுறைக்கு அல்லது மக்களுக்குள் வாழும் வழிக்கு நவீன உபகரணங்கள் முன்னுரிமைதர வேண்டும்.

முயற்சிகள் சரியான திசையில் இருந்தால், விரைவாகவோ அல்லது தாமதமாகவோ உண்மையான விளைவுகளைக் காணமுடியும். அனைத்து வயதினருக்குமான விரிவான மற்றும் மாறுபட்ட ஊட்டசத்துத்திட்டங்களின் தொகுப்பு மற்றும் கொள்கைகளை கொண்டிருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பெருமிதம் கொள்ள முடியும்.

எனினும், அனைத்து வகையான ஊட்டசத்துக் குறைபாட்டுக்கும் எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்க அனைத்து பகுங்குதாரர்களிடையே புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் அல்லது உந்துதலுக்கு கடுமையான செயல்முறைகள் முன்னெடுக்கப்படும், துல்லியமாக சரியாக செயல்படுவதற்கு புதுமையான யோசனைகள், கூட்டு வலு உதவக் கூடும்.

இதையும் படிங்க:ஒளவையாரின் பொன்மொழியை குறிப்பிட்டு பேசிய மோடி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.