ETV Bharat / bharat

பணத்தை கட்டிவிட்டு உடலை வாங்கிக்கோ...! மருத்துவமனையில் திகைத்து நின்ற மகள்

டெல்லி: மருத்துவமனையில் சிகிச்சைக்கான மீதி கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே இறந்தவர் உடலை தர முடியும் என, மருத்துவமனை நிர்வாகம் கூறியதால் தந்தையின் உடலை பெற முடியாமல் மகள் திகைத்து நின்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

author img

By

Published : Jul 7, 2020, 6:41 PM IST

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நபர் உயிரிழப்பு: உடலை எடுக்க ரூ.3.50 லட்சம் நிபந்தனை
டெல்லி மருத்துவமனை

பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிந்து வந்தவர் ஆனந்த்குமார் பாண்டே. இவர், தனது மகளுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக டெல்லிக்குச் சென்றுள்ளார்.

அங்கு ஐஎல்பிஎஸ் (The Institute of Liver and Biliary Sciences) சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சுமார் 22 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

சிகிச்சையில் இருந்த ஆனந்த்குமார் பாண்டே, திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது உடலை கொண்டு செல்ல வேண்டுமெனில், மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய 3.50 லட்சம் ரூபாய் பணத்தை கட்டிவிட்டு, உடலை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இறந்தவரின் உடலை எடுக்க நிபந்தனை
மருத்துவமனையில் தந்தை உடலை பெற முடியாமல் தவித்த மகள்...!

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆனந்த்குமார் பாண்டேவின் குடும்பத்தினர் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இதுதொடர்பாக ஆனந்த்குமார் பாண்டேவின் மகள் கூறியதாவது, "சிகிச்சையின் செலவைச் சுமக்க நாங்கள் ஏற்கனவே எங்கள் சொத்துக்கள், பொருள்களை விற்றுவிட்டோம்.

தந்தையின் உடலை எங்கள் சொந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல போதுமான பணம் கூட என்னிடம் இல்லை. பணத்தை நான் எவ்வாறு செலுத்துவேன்? என்னிடம் ஒரு பைசா கூட இல்லை. என் தந்தையின் உடலை ஏன் என்னால் பெற முடியவில்லை? " என்றார்.

சமூக செயற்பாட்டாளர் அசோக் அகர்வால் கூறியதாவது, "இதுபோன்ற வழக்குகள் பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் தான் நடைபெறும். முதல் முறையாக, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் டெல்லியிலுள்ள அரசு மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சைக்கான செலவை செலுத்தத் தவறியதால் இறந்தவரின் உடலை திருப்பித் தர மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கங்கா ராம் மருத்துவமனை வழக்கில், சிகிச்சைக்கான செலவுத் தொகை நிலுவையில் இருந்தாலும், மருத்துவமனை நிர்வாகம் இறந்தவர் உடலை வழங்க மறுக்கக்கூடாது.

மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டிய பில்களுக்காக இறந்தவர் உடலை வைத்திருக்கவும் முடியாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

எனவே இவ்விவகாரத்தில் டெல்லி மாநில அரசும், காவல்துறையும் தலையீட்டு உடனே தீர்வு காண வேண்டும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.