ETV Bharat / bharat

34 எச்.ஐ.வி தாக்கிய கர்ப்பிணிகள் - நோயற்ற குழந்தைகளை ஈன்றெடுக்க உதவிய மருத்துவமனை!

எச்.ஐ.வி நோய்க் கிருமியால் பாதித்த 34 கர்ப்பிணிகள், நோயற்ற குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளனர். இது ஜபல்பூர் லேடி எல்ஜின் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

HIV infection during pregnancy, Lady Elgin Hospital, HIV positive mothers give birth to healthy babies, Jabalpur hospital, risk of HIV during pregnancy, லேடி எல்ஜின் மருத்துவமனை, எச் ஐ வி கர்ப்பிணிகள்  வயிற்றில் உள்ள குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுமா, will unborn child affected by aids, aids affected pregnant woman, how to take care of my child
HIV infection during pregnancy
author img

By

Published : Nov 28, 2020, 12:28 PM IST

ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்): கரோனா நோய்த் தொற்று அதிகரித்திருந்த காலத்தில், 34 எச்.ஐ.வி பாதித்த கர்ப்பிணிகள் நோயற்ற குழந்தைகளை தங்கள் மருத்துவமனையில் ஈன்றெடுத்துள்ளதாக லேடி எல்ஜின் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தங்கள் மருத்துவமனையில், எச்.ஐ.வி பாதித்த 34 கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு எந்த விதமான நோய்த் தொற்றும் கண்டறியப்படவில்லை என மருத்துவமனை உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.

கடந்த 26 மாதத்தில் 135 பெண்கள் எச்.ஐ.வி பாதிப்பால் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதில், 34 கர்ப்பிணிகளும் அடங்குவர்.

இதுகுறித்து பேசிய மருத்துவர் சஞ்சய் மிஸ்ரா, “பெற்றெடுக்காத எந்த குழந்தைக்கும், தாயிடம் இருந்து எச்.ஐ.வி பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

காரணம், தாயின் ரத்தத்தின் உடனான தொடர்பு கருவில் வளரும் சிசுவுக்கு இருக்காது.

ஆனால், பிரசவ காலத்தில் இது மிகப்பெரும் சவால் நிறைந்த காரியமாகும். அதுவும், அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு இது மிகப் பெரும் சவாலாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.