ETV Bharat / bharat

காஷ்மீரின் முந்தைய வரலாறு - ஒரு பார்வை - இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா, பாகிஸ்தான் எந்த நாட்டோடும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக காஷ்மீரின் அப்போதைய மன்னராக இருந்த ஹரிசிங் அறிவித்திருந்தார். அன்றிலிருந்து இந்தியா-பாக். இடையே காஷ்மீரை அடையும் போர் தொடங்கியது.

kashmir issue
author img

By

Published : Aug 5, 2019, 2:14 PM IST

Updated : Aug 5, 2019, 4:24 PM IST

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒருங்கிணைந்த இந்தியா மவுண்ட்பேட்டன் திட்டத்தின்படி இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அப்போதிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களில் காஷ்மீரும் ஒன்று, சமஸ்தானங்கள் இந்தியாவோடு இணைவதா அல்லது பாகிஸ்தானோடு இணைவதா... இல்லை தனி நாடாக இருந்து கொள்வதா... என அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என ஆங்கிலேயே அரசு அறிவித்திருந்தது.

காஷ்மீரின் அப்போதைய மன்னராக இருந்த ஹரிசிங், பாகிஸ்தான் இந்தியா என எதனோடும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார். அன்றிலிருந்து தொடங்கியது இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீரை அடையும் போர். காஷ்மீரை தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டுவர பாகிஸ்தான் தீவிரமாக முயன்றது.

இது ஒருபுறமிருக்க, காஷ்மீர் தனி நாடாக இருக்க வேண்டும் என சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ’அனைத்து ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு’ என்னும் கட்சி போராடிவந்தது. இதன் தலைவராக இருந்தவர் ஷேக் அப்துல்லா. அவரை தன்பக்கம் இழுக்க முயன்றார் பாகிஸ்தானின் தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா. ஆனால், ஷேக் அப்துல்லா அதற்கு ஒத்துழைக்கவில்லை. காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டும் என விரும்பிய ஷேக் அப்துல்லா, மக்களைத் திரட்டிப் போராடிவந்தார்.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. பாகிஸ்தான் படைகள் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்தன. ஷேக் அப்துல்லா திரட்டிய மக்கள் மட்டும் பாகிஸ்தான் படையை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்களை நடத்திவந்தனர்.

மன்னர் ஹரிசிங் செய்வதறியாது திகைத்து, இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார். இந்தியா ராணுவ உதவியை அளிக்கும் பட்சத்தில், தற்காலிகமாக காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க அவர் ஒப்புக் கொண்டார். காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகியவற்றை மட்டும் இந்தியா கவனித்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்திய ராணுவம் காஷ்மீரினுள் புகுந்து பாகிஸ்தான் படையிடமிருந்த ஸ்ரீநகரை தன்வசப்படுத்தியது. எனினும் இந்தப் பிரச்னை முடிவடைவதாக இல்லை. எனவே ஐ.நா.வின் பார்வைக்கு இந்தப் பிரச்னையை இந்திய அரசு எடுத்துச் சென்றது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலையீட்டால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. எனினும் காஷ்மீர், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும் பகுதியாக மாறியது.

காஷ்மீர் பிரச்னையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா., காஷ்மீர் மக்களிடம் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டு ஒரு முடிவு அறிவிக்கப்படும் என்றது. இதனை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன.

காஷ்மீர் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, காஷ்மீர் நிர்வாகத்தில் இந்தியா தலையிட்டது. இந்தச் சூழலில், 1951ஆம் ஆண்டு நடந்த ஜம்மு - காஷ்மீர் தேர்தலில், இந்தியாவுடன் இணைவதற்கு காஷ்மீர் மக்கள் ஆதரவளித்தனர். இதனால் பொது வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. மக்களின் ஆதரவை அடுத்து, இந்திய அரசு காஷ்மீர் தங்களுடையது என உரிமை கொண்டாடத் தொடங்கியது.

Intro:Body:

History of Jammu and Kashmir

Conclusion:
Last Updated : Aug 5, 2019, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.