ETV Bharat / bharat

ஊரடங்கால் மேலும் வேலைவாய்பை இழக்கும் இளைஞர்கள்! - பணியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள விழ்ச்சி

டெல்லி : கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கால், நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவோரின் எண்ணிக்கை 61 விழுக்காடு குறைந்துள்ளதாக வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை அளிக்கும் பிரபல நிறுவனமான நாக்குரி தெரிவித்துள்ளது.

Naukri.com
Naukri.com
author img

By

Published : Jun 9, 2020, 6:25 PM IST

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்வுகளுடன் ஜுன் 30 தேதி வரை தற்சமயம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவு முடங்கியுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய அரசு பொருளதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் மட்டும், பணியமர்த்தப்படுவோரின் எண்ணிக்கை 61 விழுக்காடு குறைந்துள்ளதாக வேலை வாய்ப்புகள் குறித்து தகவல் அளிக்கும் பிரபல நிறுவனமான நாக்குரி தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய நாக்குரி நிறுவனத்தின் தலைமை அலுவலர் பவண் கோயல், ”ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டதன் விளைவாக, கடந்த மூன்று மாதங்களில் பணியமர்த்தப்படுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்துள்ளது.

ஆள்சேர்ப்பு செய்பவர்கள், நிறுவனத்தின் மனிதவளத் துறைத் தலைவர்களிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில், ஊரடங்கின்போது மருந்தகம், உடல் நலன் பேணுதல், காப்பீடு, மென்பொருள் துறை ஆகியவற்றின் முக்கியத் துறைகளில் சுமார் 39 விழுக்காட்டினர் பணியமர்த்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

திறமையானவர்களை பணியமர்த்துவதும் கண்டறிவதும் சிரமமின்றி நடப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை எளிதில் அணுகுவதற்கும் கண்டறிவதற்கும் 'ஸ்டெப்-அப்' பெரிதும் உதவியாக இருக்கிறது.

நாட்டில் உள்ள பெரும்பான்மையான நகரங்களில் பணியமர்த்துவதில் 50 விழுக்காட்டிற்கும் மேல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் கொல்கத்தா 68 விழுக்காடும், டெல்லி, மும்பை நகரங்கள் 69 விழுக்காடு சரிவையும் சந்தித்துள்ளன.

பணியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள விழ்ச்சியால் 66 விழுக்காடு புதிதாக வேலைத்தேடும் இளைஞர்களும், மூன்று வருடத்திற்கும் குறைவான வேலை அனுபவம் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.