பாஜக குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர் மீது, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சௌத்திரி என்பவர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 13ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சசி தரூர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞரும் நேரில் வராததால், சசி தரூருக்கு பிடிவாரண்டி பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சசி தரூரை கைது செய்யக்கோரிய உத்தரவுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடைவிதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் சசி தரூர் ஆற்றிய உரையின்போது, 2019ஆம் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், இந்தியாவில் 'இந்து-பாகிஸ்தான்' ஆட்சிதான் நடைபெறும். எப்படி பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகள் நசுக்கப்படுகிறதோ, அதேபோல் இந்தியாவிலும் அந்த நிலை அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.