ETV Bharat / bharat

நெகிழிக் கழிவுகளை கலைப்பொருள்களாக மாற்றும் கல்பனா! - Plastic ban

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்பனா, நெகிழிக் கழிவுகளிலிருந்து கலைப்பொருள்களை உருவாக்கிவருகிறார்.

Plastic ban
Plastic ban
author img

By

Published : Jan 1, 2020, 12:17 AM IST

Updated : Jan 1, 2020, 12:13 PM IST

இமாச்சலப் பிரதேசத்தின் மணாலி பகுதியில் வசிக்கும் கல்பனா தாக்கூர், பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்த தனித்துவமான ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். இந்தச் சிறந்த முயற்சியின் மூலம், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து அழகிய கலைப்பொருள்களை கல்பனா உருவாக்குகிறார். கல்பனா லாகஹவுல் சிப்பிட் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், இவர் கடந்த பல ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் மணாலியில் வசித்துவருகிறார்.

இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா, "பெரிய அளவிலான நெகிழிக் கழிவுகளை நாம் உற்பத்தி செய்கிறோம் என்பது எனக்குத் தெரியும். தினமும் எங்கள் குப்பைத்தொட்டி நெகிழிக் கழிவுகளால் நிரம்பியிருக்கும். இதுவே நெகிழியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து என்னை சிந்திக்கவைத்தது" என்றார். மணாலியில் நெகிழிப் பொருள்களை அரசு தடைசெய்தவுடன் தான் பல சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கல்பனா கூறினார்.

நெகிழிக் கழிவுகளை கலைப்பொருள்களாக மாற்றும் கல்பனா

நெகிழிக் கழிவுகளிலிருந்து பல்வேறு வகையான கலைப்படைப்புகளை உருவாக்கத் தொடங்கினார் கல்பனா. இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "முதலில் பொழுதுபோக்காகத் தொடங்கிய இச்செயல், இப்போது எனக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் செய்துவரும் பணிக்காக, மக்கள் என்னைப் பாராட்டுகிறார்கள், இது நெகிழிக் கழிவுகளை, மேலும் மறுசுழற்சி செய்ய என்னை ஊக்கப்படுத்துகிறது" என்றார்.

அவரது இந்தப் பணியை பல நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கு எதிரான அரசின் பரப்புரைகளைப் பாராட்டியுள்ள கல்பனா, பொதுமக்கள் நெகிழிப் பொருள்களை குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்!

Intro:Body:

Jan 1 - Plastic Campaign Story - Himachal's Kalpana reuses plastic waste by making beautiful artefacts 

Conclusion:
Last Updated : Jan 1, 2020, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.