அமெரிக்காவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள புலி ஒன்று கரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வனவிலங்கு சரணாலயத்தில் பணிபுரியும் அலுவலர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
அதில் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள விலங்குகளை சிசிடிவி கேமரா வாயிலாக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் விலங்குகளின் அருகில் பராமரிப்பாளர்களை அனுமதிக்கக்கூடாது.
பாலூட்டிகளை சிறப்பு கவனம் எடுத்து கண்காணிக்க வேண்டும்” என்பன போன்ற பல்வேறு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமே தாக்கும் என்று நம்பப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவில் முதல்முறையாக புலிக்கு கரோனா தொற்று இருப்பது அறியப்பட்டது. இதையடுத்து வனவிலங்கு சரணாலய அலுவலர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.