வடகிழக்கு இந்தியாவில் போதை பொருள் கடத்தப்படுவது சமீபத்தில் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, கடத்தலை தடுத்து நிறுத்த காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில், கார்பி அங்லாங் மாவட்டத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கார்பி அங்லாங் மாவட்டத்தில் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தினர். அப்போது, சோதனைச் சாவடிக்கு வந்த ட்ரக்கை சோதனையிட்டதில், 3.45 கிலோ போதை பொருள் அதிலிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, மணிப்பூரை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், இம்பாலிலிருந்து குவாஹத்திக்கு போதை பொருள் கடத்தப்படுவது தெரியவந்தது. அதேபோல், மோரிகவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டதில், 88 கண்டெய்னர்களில் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. இதை தவிர்த்து, கோயில்களிலிருந்து திருடப்பட்ட பொருள்கள் அங்கிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவற்றை கைப்பற்றிய காவல்துறை, விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். இதுத் தொடர்பாக, காவல்துறை தம்பதியினரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!