ETV Bharat / bharat

தெலங்கானா முதலமைச்சர் வலியுறுத்தும் 'ஹெலிகாப்டர் மணி' - ரிசர்வ் வங்கியால் முடிந்தது என்ன? - பொருளாதார சிக்கல்

கரோனா சூழலால் மாபெரும் பின்னடைவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை சரி செய்ய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், 50 ஆண்டுகள் பழைமையான 'ஹெலிகாப்டர் மணி' திட்டத்தை பின்பற்றும்படி இந்தியன் ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

'ஹெலிகாப்டர் மணி' திட்டம்
'ஹெலிகாப்டர் மணி' திட்டம்
author img

By

Published : Apr 15, 2020, 3:46 PM IST

'ஹெலிகாப்டர் மணி' என்பது பொருளாதார நிபுணர் மில்டன் பிரைட்மேன் என்பவரால் 1968ஆம் பயன்படுத்தப்பட்ட சொல், பொருளாதார பின்னடைவின் கடைசி கட்டத்தில் அவர் இம்முயற்சியினை மேற்கொள்ள சொல்கிறார். பணப்பற்றாக்குறை காரணமாக சரக்கு மற்றும் சேவைகளுக்கான மதிப்பு மறுக்கப்படும் சூழல்தான் பொருளாதார பின்னடைவின் கடைசி கட்டம்.

இதுகுறித்து இந்தியன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர் காந்தியிடம் (2014-2017) நமது ஈடிவி பாரத் பத்திரிகையாளர் கிருஷ்ணன் திரிபதி கண்ட நேர்காணல்.

ஹெலிகாப்டர் மணி என்றால் என்ன?

பொருளாதாரத்தை கடந்து சமூக நலனுக்காக அரசாங்கத்தால் பெரும் அளவில் செலவிடப்படும் பணமே 'ஹெலிகாப்டர் மணி' ஆகும். அது பல்வேறு துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற காந்தி, இந்த திட்டத்தின் முனனோடியாக திகழ்பவர் முன்னாள் அமெரிக்க பெஃட் தலைவர் பென் பெர்னேக். இத்திட்டத்திற்கு பெருமளவு ஆதரவளித்த காரணத்தால் அவர் ஹெலிகாப்டர் பென் எனவும் அழைக்கப்பட்டார்.

'ஹெலிகாப்டர் மணி' என்பது மத்திய வங்கிக்கு பொருந்தாது. அதற்கு புதிய பணப் புழகத்தை அதிகரிக்கும் திட்டம் இருக்கிறது. பொருளாதாரத்தில் பணப் புழக்கம் அதிகரிக்க அது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எந்த மாதிரியான பொருளாதார தொகுப்பை தெலங்கானா முதலமைச்சர் எதிர்பார்க்கிறார்?

தெலங்கானா முதலமைச்சர் இந்திய ஜிடிபியில் 5% வரை கேட்கிறார். அதாவது கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய். இன்னும் சில தலைவர்கள் இதைவிட அதிகமாக 20 முதல் 24 லட்சம் கோடி ரூபாய் வரை கேட்டிருக்கிறார்கள்.

இப்படியான சூழலில் முதற்கட்டமாக 1.7 லட்சம் கோடி ரூபாயை பிஎம் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் வழங்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதில் பிஎம் கிஷான் எனும் விவசாயிகளுக்கான திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியும் அடங்கும்.

தெலங்கானா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.

ஆர்பிஐ எப்படி பணப் புழக்கத்தை அதிகரிக்கும்?

ஆர்பிஐ அல்லது வேறு ஏதேனும் மத்திய வங்கி பணத்தை அச்சடித்து தேக்கி வைத்துக்கொள்ளும். பணத்தின் தேவை அதிகரிக்கும் வேளையில் அதனை புழக்கத்தில் விடும். அதுவரை பணப் புழக்கங்கள் முடிந்த அளவு பதிவு செய்யப்படும் எண்களாகவே இருக்கும்.

அச்சடிக்கும் பணத்தின் அளவு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

நிர்ணயிக்கப்பட்ட ஜிடிபி வளர்ச்சியின் விகிதத்தோடு ஒப்பிட்டு பணம் அச்சடிக்கப்படுகிறது என்கிறார் ஆர்பிஐ அதிகாரி ஒருவர்.

புழக்கத்தில் எவ்வளவு பணம் உள்ளது?

மார்ச் 2020 நிலவரப்படி 24.39 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் இருந்ததை விட கொஞ்சம் அதிகம்.

புதிய பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விடும் முன் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, பணத்தின் பயன்பாடு, அரசு திட்டங்களின் வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளை வங்கி கணக்கில் கொள்ள வேண்டும் என ஆர்பிஐ அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச் 2020-இன் ஜிடிபி, கடந்த இரு ஆண்டுகளை விட சற்று அதிகம்.

ஆர்பிஐ அதிகமான பணங்களை அச்சிடுமா?

பலர் அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல, அது சரியான முறையுமல்ல.

பல லத்தின் அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகள் இதுபோன்ற சூழலில் அதிகமான பணத்தை அச்சடித்து தங்கள் பண மதிப்பை குறைத்துக்கொண்டன.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஜிம்பாப்வே...

2007-2009 காலகட்டத்தில் ஜிம்பாப்வே அதிகமான நோட்டுகளை அச்சிட்டதால், அவர்கள் பணத்தின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்தது.

1 அமெரிக்க டாலர் நோட்டுக்கு100 ட்ரில்லியன் ஜிம்பாப்வே நோட்டுகள் வழங்கப்பட்டன. கணக்குவழக்கில்லாமல் நோட்டுகளை அச்சடித்ததின் விளைவாக தங்கள் பணத்தின் மதிப்பை இழந்தது ஜிம்பாப்வே என ஆர்பிஐ அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

பண வளர்ச்சியையும் வீக்கத்தையும் ஆர்பிஐ எப்படி சமநிலை செய்கிறது?

மத்திய வங்கிகள் பண விநியோகத்தை அதிகரிப்பதால் பண வீக்கம் ஏற்படும். எனவே அரசியல்வாதிகள், மக்கள் வலியுறுத்தினாலும் ஆர்பிஐ பணத்தை அச்சிடாது.

எந்த சூழல் பண வீக்கத்தை அதிகரிக்கும் என்பது ஆர்பிஐக்கு தெரியும். எனவே சூழலை பொருத்துதான் ஆர்பிஐ பணத்தை அச்சிடும்.

நவீன பொருளாதாரம் பணத் திட்டங்களை அதிகார உந்துதலில் இருந்து காக்கிறது. பணத் திட்டங்கள் ஔிவுமறைவற்று இருப்பது பணத்தின் மதிப்பை நிலையாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மத்திய வங்கிகளில் அரசியல் தலையீடு இருக்காது.

உருவாக்கப்படும் நோட்டுகள் சுழற்சி செய்யப்படும் முறை?

மத்திய வங்கியிடம் இருந்து மற்ற வங்கிகள், எல்ஐசி போன்றவை பணத்தைப் பெறும். பின்னர் அதனை அதிக வட்டிக்கு ஆர்பிஐ பெற்றுக் கொள்ளும்.

பணப் புழக்கத்தை அதிகரிக்கும் திட்டம் வெளிநாடுகளில் எப்படி வேலை செய்தது?

2007-08ஆம் ஆண்டு சந்தித்த உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் அமெரிக்க ஐரோப்பிய மத்திய வங்கிகள் அதிகமான சொத்துகளை வாங்கத் தொடங்கின. அதன்மூலம் சந்தையில் பணப் புழக்கத்தை அதிகரித்து பொருளாதார முன்னேற்ற செயல்பாடுக்கு ஆதரவளித்தன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதாரச் சிக்கலை சந்திக்கும்போது இந்த முறையையே வங்கிகள் பின்பற்றி அதனை சரி செய்யும் முயற்சிக்கு உதவின என்கிறார் இந்தியன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர் காந்தி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.