ETV Bharat / bharat

நச்சில்லா உணவு உற்பத்தியை நோக்கி இந்தியா! - நச்சில்லா உணவு உற்பத்தியை நோக்கி இந்தியா!

புவியியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு உலகில் எங்கு சென்றாலும் மனித வாழ்க்கையில் உணவு மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டும் மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மனித ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் பொருட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசு கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.

நச்சில்லா உணவு உற்பத்தியை நோக்கி இந்தியா!

author img

By

Published : May 30, 2020, 11:33 AM IST

Updated : May 30, 2020, 1:00 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நெல், பருப்பு, காய்கறி உள்ளிட்டவற்றில் தெளிக்க பயன்படுத்தும், நச்சுத் தன்மைக் கொண்ட 27 வகையான பூச்சிக்கொல்லி மருந்திற்கு தடை விதிக்கும் விதமாக மசோதாவை தயார் செய்துள்ளது. இதுகுறித்து மாற்றுக் கருத்து ஏதேனும் இருப்பின் 45 நாள்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யலாம் என்றும் அதுகுறித்து பரிசீலக்கப்பட்டு ஜூலை மாதத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் பட்டியல்.

கார்போஃபுரான்: தேனீக்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கிழைக்கும் இந்த பூச்சிக்கொல்லிக்கு 63 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிக்ளோஃபெனாக்: இந்த பூச்சிக்கொல்லி மருந்திற்கு 45 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெத்தோமில்: இந்த பூச்சிக்கொல்லி மருந்திற்கு 35 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஸிபேட் : இந்த பூச்சிக்கொல்லி மருந்திற்கு 32 நாடுகள் தடை விதித்துள்ளது.

குயினல்போஸ்: இந்த பூச்சிக்கொல்லி மருந்திற்கு 30 நாடுகள் தடை விதித்துள்ளது.

பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை பாதுகாக்க விவசாயிகளால் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள்,
நுகர்வோரின் உடல்களில் நேரடியாக நுழைந்து அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது.

நச்சுத்தன்மை கலந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு விதமான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் நீண்ட காலமாக எச்சரித்துவருகின்றனர். இதில், அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உணவில் கலந்துவிடும் இந்த ரசாயனங்கள், புற்றுநோய்கள் உருவாவதற்கும், ஹார்மோன்களில் குறைபாடுகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன. நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவை சாப்பிடுவதால் ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேர் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, 27 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த மத்திய அரசு, கட்டுப்பாடுகளை விரைவில் அமல்படுத்தவேண்டும்.

ராஞ்சி, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் பூச்சிக்கொல்லி மருந்து பொருள்களை கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இந்த நச்சுத்தன்மைக் கொண்ட மருந்துகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் பயன்படுத்தியதால், மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.

கேரளாவில் எண்டோசல்பானின் என்ற வேதியியல் மருந்தை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தியதால், அம்மாநிலத்தில் பல்லுயிர்தன்மையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், மீன், தவளைகள், பாம்புகள், வவ்வால்கள் முதல் வன விலங்குகள் வரை பல உயிர்கள் பாதிக்கப்பட்டதை எளிதில் மறந்துவிட முடியாது. சுற்றுச்சூழலுக்கு இத்தகைய பாதிப்பை ஏற்படுத்திய பின்பும் இந்த எண்டோசல்பானை பிற மாநிலங்களில் தொடர்ந்து பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது.

மோனோக்ரோடோபாஸ் மற்றும் ஆக்ஸிஃப்ளூர்பென் போன்ற பூச்சிக்கொல்லிகளை சேமித்து வைப்பதற்கும், அதன் போக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிப்பது மட்டும் போதாது, அதன் உற்பத்தியையும் நிறுத்த வேண்டும். மேலும், 27 விதமான பூச்சிக்கொல்லி மருந்து பொருள்களுக்கு தடை விதிப்பது மட்டும் போதாது என்றும், இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருப்பதாகவும் வேளாண் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டப்பின், அறுவடை செய்வதற்கு எத்தனை நாள்கள் காத்திருக்க வேண்டும் என்பதை விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு பின் அறுவடை செய்வது நுகர்வோருக்கு எவ்வித ஆபத்தையும் விளைவிக்காது என்றும் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக, களைகளை அழிக்க கிளைபோசேட் போன்ற ரசாயன பொருள் விவசாயிகளால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது முழு பயிரையும் நச்சுத்தன்மை உடையதாக மாற்றுவது மட்டுமல்லாமல், மண்ணின் தரத்தை குறைத்து, நீர் மாசுபாட்டையும் ஏற்படுத்துகிறது.

ரசாயன பொருள்களின்றி பாதுகாப்பான முறையில் பயிர் சாகுபடி மேற்கொள்ளும் விதமாக இயற்கை கரிம வேளாண்மைக்கென சட்டக் கட்டமைப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். நச்சுத்தன்மைக் கொண்ட பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்வதன் மூலம், மாசுபாட்டை அகற்றவும், இயற்கை புத்துயிர் பெறவும், மண்ணின் தரம் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் வழிவகை செய்யும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

இதையும் படிங்க: ஹிட் அடித்த 'ஸ்பீக் அப் இந்தியா': 10 கோடி மக்களை சென்றடைந்த பரப்புரை

Last Updated : May 30, 2020, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.