ETV Bharat / bharat

கோவிட்-19 சிகிச்சைக்கு டெக்ஸாமெதாசோன் மருந்தை சேர்த்தது மத்திய சுகாதாரத் துறை! - Corona medicine

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஸ்டீராய்டு மருந்தான டெக்ஸாமெதாசோன்(Dexamethasone) மருந்தையும் சில கட்டுப்பாடுகளுடன், மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன்
ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன்
author img

By

Published : Jun 28, 2020, 9:48 AM IST

டெல்லி: மிதமானது முதல் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளின் உயிர் காக்க மட்டுமே பயன்படும், ஸ்டீராய்டு (ஊக்க மருந்து) வகையிலான டெக்ஸாமெதாசோன்(Dexamethasone) மருந்து பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக மிதமானது முதல் மோசமான நிலையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு மெதில்பிரட்னிசோலன் மருந்து தரப்படுகிறது. அதற்கு மாற்றாக டெக்ஸாமெதாசோன் மருந்தை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

சமீபத்தில் கிடைத்த பல்வேறு ஆதாரங்கள், மருத்துவ நிபுணர்களுடனான கலந்தாய்வுகள் ஆகியவை மேற்கொண்டபின் டெக்ஸாமெதாசோன் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிட்-19 சிகிச்சை முறையில் திருத்தம் செய்து வெளியிட்ட அறிவிப்பில், 'டெக்சாமெதாசோன் மருந்து ஏற்கெனவே நடைமுறையில் நுரையீரல் தொற்றுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் எதிர்ப்பு அழற்சி, நோய் எதிர்ப்பு தடுப்பு விளைவுகள் ஆகியவற்றுக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தை தற்போது கரோனா நோயாளிகளில் மிதமானது முதல் மோசமான நிலையில் இருப்போருக்கு மாற்றாக, பயன்படுத்தலாம்.

மிதமான அல்லது மோசமான நிலைியல் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு மெதில்பிரட்னிசோலன் 0.5 முதல் 1 மில்லிகிராம் அல்லது டெக்ஸாமெதாசோன் 0.1 முதல் 0.2 மில்லிகிராம்வரை மூன்று நாட்களுக்கு வழங்கலாம். அதிலும் அந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவது அதிகரிக்கும்பட்சத்தில், அழற்சி குறியீடு உடலில் தென்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்பட்ட 48 மணிநேரத்துக்குள் வழங்கலாம். இருப்பினும், நோயாளியின் உடல்நலனை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, கரோனா சிகிச்சைக்கான வழிகாட்டலில் மாற்றத்தை மத்திய சுகாதாரத்துறை செய்துள்ளது.

ஜூன் 13ஆம் தேதி ஆன்டி-வைரல் மருந்தான ரெம்டெசிவர் கலவையான, கோபிஃபார் மருந்தை பயன்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதித்தது. ஏற்கெனவே ரெம்டெசிவர் மருந்தும் கரோனா சிகிச்சையில் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே தொடக்கத்தில் மலேரியா நோய்த்தடுப்பு மாத்திரையான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கரோனா நோயாளிகளுக்கு வழங்கலாம் எனத் தெரிவித்திருந்தது. பின்னர் அதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நிறுத்தி, ஆபத்தான நிலையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு வழங்கக்கூடாது, தொடக்க நிலையில் இருப்போருக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை வழங்கலாம் என மாற்றியது.

டெக்ஸாமெதாசோன் மருந்தை லண்டன் மருத்துவர்கள் சமீபத்தில் கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தியபோது, ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பு, ஐந்தில் ஒரு பங்காக குறைகிறது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே, இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

உலக சுகாதார அமைப்பும் சமீபத்தில் தெரிவித்த கருத்தில், வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு இந்த டெக்ஸாமெதாசோன் மருந்தை வழங்கினால் உயிரிழப்பு மூன்றில் ஒருபங்கு தடுக்கப்படும். இருப்பினும் இது தீவிரமான மருத்துவ ஆலோசனைக்குப்பின்புதான் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது.

டெக்ஸாமெதாசோன் வரலாறு:

லண்டன் ஆக்ஸ்போர்டு மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கும் டெக்ஸாமெதாசோன் மருந்து ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. கடந்த 1957-ம் ஆண்டு பிலிப் ஷோவால்டர் ஹென்ச் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு 1961-ம் ஆண்டு முதல் மருத்துவ உலகில் மருத்துவர்களால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

கோவிட்-19 இறப்புகளை குறைக்கும் ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன்!

ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் மருந்து தயாரிப்பு:

உலகளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்கள் எந்த அளவுக்கு பெரும்பங்கு வகிக்கிறதோ, அதேபோலத்தான் டெக்சாமெதாசோன் மருந்துகள் உற்பத்தியிலும் இந்திய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த டெக்சாமெதோசோன் மருந்தை உற்பத்தி செய்து வருகின்றனர்.

ரெம்டெசிவர் மருந்துபோன்று இது ஒன்றும் விலை அதிகம் இல்லை, 10 மாத்திரைகள் கொண்ட அட்டையே 3 ரூபாய்க்கு உள்ளாகத்தான் இருக்கும்.

ஸ்டீராய்டு டெக்ஸாமெதாசோன் மருந்தின் பயன்பாடுகள்:

முன்னரே கூறியதுபோல் டெக்ஸாமெதாசோன் என்பது ஒரு வகை ஸ்டீராய்டு( ஊக்க வகை) மருந்தாகும். பல்வேறு விதமான வாத நோய்கள், தோல் நோய்கள், ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா, நீண்டகால சுவாச நோய்கள், சுவாசக் குழாயில் ஏற்படும் ஒருவகை அலர்ஜியைப் போக்குதல், மூளை வீக்கம், கண் சிகிச்சை, கண் வீக்கம், கண் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

காசநோய்க்கு நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்குப் பிரசவ நேரத்தில், அதாவது குறைமாத பிரசவ நேரத்தில் குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை வாய்வழியாகவோ அல்லது ஐவி எனப்படும் நரம்புகள் மூலமோ நோயாளியின் தன்மைக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

டெக்ஸாமெதாசோன் மருந்தை மருத்துவர்கள் ஆலோசனைப்படி இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்ளுதல்கூடாது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.