புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதனடிப்படையில், புதுச்சேரி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதுச்சேரி மாநில எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன.
குறிப்பாக கனகசெட்டிக்குளம், முள்ளோடை, மதகடிப்பட்டு, ஊசுட்டேரி பகுதி, கோரிமேடு எல்லைகளில் காவல் துறை சார்பில் தடுப்புகள் அமைத்து சீல்வைக்கப்பட்டது. இதன் காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து புதுச்சேரி வரும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுவருகின்றன.
இதனால், புதுச்சேரி எல்லையோரப் பகுதிகளில் நுழையமுயலும் மக்களுக்கும், காவல் துறையினருக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவிவருகிறது. மாநில எல்லைகளில் காவல் துறை கடுமையாக கரோனா கண்டறிதல் சோதனைசெய்யும் நிலையில், தேவைப்படுவோருக்கு அங்கேயே மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இதில் கரோனா தொற்று அறிகுறி யாருக்கேனும் இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இந்தச் சூழலில் புதுச்சேரி எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா கண்டறிதல் சோதனை பணிகளை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆய்வுசெய்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று பரவல்: அவசர சிகிச்சைக்கு மட்டுமே கண் மருத்துவம்