உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு 4.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். முன்னதாக, சமாஜ்வாதி கட்சி சார்பாக தேஜ் பகதூர் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய ஆயுத பாதுகாப்புப் படையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த மனுவை அவர் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவர் அலகாபாத் நீதிமன்றத்தில் மோடி வெற்றிபெற்றதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி மனோஜ் குப்தா, வேட்பாளராக இல்லாத தேஜ் பகதூர் வழக்கு தொடர்வதற்கு உரிமை இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
முன்னதாக, பிரதமர் மோடி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சத்யபால் ஜெயின், தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை, எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதம் முன்வைத்திருந்தார்.
இதையும் படிங்க: ’பெண்களின் உணர்வுகளை மதிக்க ஆண்களுக்கு கற்றுத்தர வேண்டும்‘ - குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்