ETV Bharat / bharat

வேலை இழந்துவிட்டீர்களா...? வேலையின்மைக் காப்பீடு உங்களுக்கு உதவும்! - india job loss

கரோனா தொற்றால் மக்களுக்கு உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத்தாண்டியும்; அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பலரும் வேலை இழக்கும் அபாயம்தான் அதிகம் உள்ளது. இந்தப் பிரச்னைக்கு வேலையின்மை காப்பீடு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

keyboard
keyboard
author img

By

Published : Jul 8, 2020, 7:51 AM IST

கரோனா தொற்று காரணமாக, இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அதன் பிரதிபலிப்பாக மக்கள் பலர் தங்கள் வேலைகளை இழந்து வருகிறார்கள். சில நிறுவனங்களில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி, திடீரென்று பணியில் இருந்து நீக்கப்படும் சூழலால், அங்கு பணிபுரிந்த ஆட்களுடன் அவர்களைச் சார்ந்து இருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் நெருக்கடி கரோனாவைக் காட்டிலும் பெரும் துயரமானது.

இதுபோன்ற எதிர்பார்க்க முடியாத, பல திடீர் காலகட்டத்தில் வேலையின்மை இன்ஸ்யூரன்ஸ் ஒன்று நாம் எடுத்திருந்தால் நம் வீட்டின் நெருக்கடி பொருளாதாரத்தை குறிப்பிட்ட காலம்வரை சமாளிக்க ஆறுதலாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வேலை இழப்பு இன்ஸ்யூரன்ஸ் என்றால் என்ன?

வேலை இழந்த தனி நபர் ஒருவர் வேலையின்மை இன்ஸ்யூரன்ஸ் ஒன்று போட்டிருந்தால், அந்த பாலிசிதாரரின் பெயருக்கோ அல்லது அவரது குடும்பத்தினர் பெயரிலோ ஒரு குறிப்பிட்டத் தொகை வந்து சேருவதால், அது அவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்.

யாரெல்லாம் வேலை இழப்பு இன்ஸ்யூரன்ஸ் பெற முடியும்?

உண்மையில் வங்கியில் தனி நபர் ஒருவரால், வேலையின்மை இன்ஸ்யூரன்ஸைத் தனியாக பெற்றுவிட முடியாது. அது விபத்து, உடல் நலக்குறைவு உள்ளிட்ட பெரும் காப்பீடு மூலம் பாலிஸி ஒன்று எடுப்பதின் வாயிலாக, அவர்கள் திடீரென்று வேலையை இழக்கும் சூழலில், இந்தப் பாலிஸி பிரிவுகளின் கீழ், தங்களின் வேலை இழப்பு இன்ஸ்யூரன்ஸைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் எதையெல்லாம் பெற்றுக் கொடுக்கும்?

தனி நபர் ஒருவர் இந்த பாலிஸி எடுத்த பின்பு, அவரின் மாத ஊதியத்தில் இருந்து, சுமார் 50 விழுக்காடு இந்த காப்பீட்டுத் தொகைக்குச் செலுத்திட வேண்டும் அல்லது மாற்றாக மூன்று பெரும் தவணையாகக் கூட செலுத்தலாம்.

எந்தெந்த வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் இந்த இன்ஸ்யூரன்ஸை வழங்குகின்றன?

ஐசிஐசிஐ வங்கியில் லொம்பார்ட் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டம்;

ஹெச்டிஎஃப்சி வங்கியில் எர்கோ சுரக்ஷா ப்ளஸின் வீட்டு லோன் காப்பீட்டுத் திட்டம்;

ராயல் சுந்தரம் நிதி நிறுவனத்தில் உடல்நிலை பாதுகாப்பு லோன் காப்பீட்டுத் திட்டம்

இந்த இன்ஸ்யூரன்ஸ் பெற சமர்ப்பிக்க வேண்டிய ஆதாரம்?

இந்த பாலிஸிதாரருக்கு விபத்து, உடல் நலக்குறைவு ஆகியவை மூலம் வேலை இழக்க நேரிட்டாலோ அல்லது திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டாலோ அதற்கான தகுந்த ஆவணத்தை இந்த பாலிஸி போடப்பட்டுள்ள வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இது வங்கிகள் பல்வேறு மோசடிகளில் சிக்கக்கொள்ளாமல் பாதுகாப்பிற்காக கேட்கப்படும் ஓர் முக்கிய ஆவணம். அவ்வாறு இதனை முறையாக சமர்ப்பித்த பின், வங்கி மூலம் அந்த நபருக்கு அவரின் ஆறு மாத ஊதியத் தொகை வழங்கப்படும்.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் ஊதியத்தை உயர்த்திக் கொடுக்கும் ஐசிஐசிஐ வங்கி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.