ETV Bharat / bharat

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையில் வெளிநாட்டு சதி: திடுக்கிடும் தகவல்

author img

By

Published : Oct 7, 2020, 3:27 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாதிய கலவரத்தை தூண்டும் நோக்கில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு 100 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை இயக்குனரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனறும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவத்தை முன்வைத்து உத்தரப் பிரதேசத்தில் சாதிய கலவரத்தை தூண்ட வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து 100 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. அனுப்பப்பட்ட 100 கோடி ரூபாயில் 50 கோடி ரூபாய் மொரிஷியஸ் நாட்டில் இருந்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

'Justice for Hathras victim' என்ற இணையதளத்தின் செயல்பாடுகளை அமலாக்கத் துறை இயக்குனரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. போராட்டத்தை தூண்டுவதற்காக இந்த இணையதளம் பயன்படுத்தப்படுகிறதா, இதற்கு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து நிதி கிடைத்துள்ளதா என்பது குறித்து அமலாக்கத் துறை இயக்குனரகம் தீவிரமாக விசாரித்து வருகிறது.

மாநில அரசுக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் வெளிநாட்டு சதி நடந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தக் கோணத்தில் விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில், அமலாக்கத் துறை இயக்குனரகம் பண மோசடி வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமலாக்கத் துறை இயக்குனரகம், பணமோசடி தடுப்பின் கீழ் வழக்குத் தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி வெளிநாட்டு நிறுவனங்களிடம் அமலாக்கத் துறை விசாரணை செய்யலாம்.

இதையும் படிங்க: ஹத்ராஸில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.