இது குறித்து ஹரியானா மாநிலம் கர்னல் காவல்துறையினர் தெரிவிக்கையில், "கர்னல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்கள் காவல்நிலையத்தில் நேற்று(நவ.24) புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர், "எனக்கும் எனது கணவர் சுஷில் குமாருக்கும் வாக்கும்வாதம் ஏற்பட்டது.
அதையடுத்து, எங்களது மூன்று, ஐந்து மற்றும் ஏழு வயதுடைய மூன்று குழந்தைகளையும் வெளியில் அழைந்துச் செல்வதாக கூறினார். ஆனால், திரும்பி வந்த போது குழந்தைகளை அழைத்து வரவில்லை.
அவரிடம் கேட்டதற்கு, கர்னல் பகுதியில் உள்ள கால்வாயில் வீசியதாக பதிலளித்தார். எனவே எனது குழந்தைகளை மீட்டுத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டார். தற்போது சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகளை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6 மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை உள்பட மூவர் கைது!