ETV Bharat / bharat

பூச்சிக்கொல்லி தடை - பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கவலை - Pesticides ban in India

நாடு முழுவதும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடைசெய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு தங்கள் வாழ்வாதரத்தைப் பாதிக்கும் என பஞ்சாப், ஹரியான மாநில விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு இதோ...

Farmer
Farmer
author img

By

Published : Jun 11, 2020, 1:19 PM IST

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் துறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு தீவிரமாக்கப்பட்டது. இதன் மூலம் உற்பத்தி அதிகரித்து விவசாயிகளின் வருவாயும் பெருகத் தொடங்கியது.

வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை பெரிதும் சார்ந்துள்ளன. அதேவேளை இதன் காரணமாக ஏற்பட்ட பின்விளைவுகளையும் அந்த மாநிலங்கள் கண்டுள்ளன. இதையடுத்து 27 பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவு அங்கு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இரு மாநில விவசாயிகள் இந்த அறிவிப்பின் காரணமாக தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

அரிசி, கோதுமை ஆகிய தானியங்கள் ஹரியானா மாநிலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றுடன் பருத்தி, கரும்பு, சோளம் உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகள் இந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் 75 விழுக்காடு பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பூச்சிக்கொல்லிகளையே சார்ந்துள்ளனர்.

ஆனால், பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் 1 விழுக்காடு மட்டுமே பூச்சிகளை கட்டுப்படுத்துகின்றன, மீதமுள்ள 99 விழுக்காடு மருந்து விளைபொருளில் கலந்து உண்பவருக்கு தீமை விளைவிகிறது. இதன்காரணமாகவே 27 பூச்சிக்கொல்லிகளை தடை செய்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நல்ல நோக்கத்துடனே அரசாங்கம் இந்தத் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேவேளை அதற்கான மாற்றை அரசு தெரிவிக்காதது விவசாயிகளின் வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்ற அச்சம் நிலவிவருகிறது. இந்தத் தடை குறித்த அறிவிப்பை மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்தாலும், இது குறித்து விவசாயிகளும் பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்களும் தங்கள் கருத்தை 45 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளது.

இதையும் படிங்க: பூச்சிக்கொல்லித் தடையால் கலக்கமடைந்துள்ள மாம்பழ சாகுபடி விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.