ETV Bharat / bharat

கரோனா தாக்கம் கட்டுக்குள் உள்ளது: ஹர்ஷ் வர்தன் - ஹர்ஷ் வர்தன்

காணொலி காட்சி வாயிலாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்துகொண்டார். மேலும் இந்தியா கோவிட்-19 போன்ற சவாலான பெருந்தொற்றை சரிவர கையாண்டது என்று கூட்டத்தில் அமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஹர்ஷ் வர்தன்
ஹர்ஷ் வர்தன்
author img

By

Published : Jul 24, 2020, 6:03 PM IST

டெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், இதுவரை இந்தியாவில் ஒரு கோடியே 5 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 3.5 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து கரோனா பரிசோதனைகளை அதிகரித்து, நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12.5 லட்சத்தை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.45 விழுக்காடாகவும், உயிரிழப்பு விகிதம் 2.3 விழுக்காடாகவும் உள்ளது.

இந்தியா மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - சர்வதேச நிதியம்

உலகிலேயே ஒரு லட்சம் பேரில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும், கரோனா பாதித்து பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் குறைவாக உள்ளது.” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.